லோக்சபா தேர்தல் தேதி தள்ளிப் போகிறதா? அருண் கோயல் திடீர் ராஜினாமா.. பின்னணியில் எழும் பரபர சந்தேகம்!
டெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் பதவி விலகல் காரணமாக, லோக்சபா தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் கோயல் ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று முதலே அருண் கோயல் தேர்தல் ஆணையர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அரசிதழில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு தேர்தல் ஆணையர்: அருண் கோயல் பதவி விலகி இருப்பதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையர் குழுவில் 3 பேர் இடம்பெற வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளதால் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையராக உள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் கோயல், கடந்த நவம்பர் 21, 2022-ல் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் 2022ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
தேர்தல் தேதி எப்போது?: தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அருண் கோயல் தற்போது திடீரென விலகி இருப்பதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுகொண்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளன.
கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே தேதி வாக்கில் இந்த முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தள்ளிப்போகிறதா?: இப்படியான சூழலில் திடீரென அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா காரணமாக, தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகுமோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் மட்டுமே இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பு பணிகள் தாமதமாகக் கூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகுமா அல்லது, உடனடியாக காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு வேறு நபர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படுமா? அல்லது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கும் நிலையிலேயே லோக்சபா தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றிற்கு விரைவில் விடை தெரியும்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications