Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காங்கிரஸ் முக்த் பாரத்".. விடுக்கப்பட்ட சவால்.. நிறைவேறுகிறதா மோடியின் அந்த பல்லாண்டு கனவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் முக்தி பாரதம் என்ற கனவை கிட்டத்தட்ட பாஜக நெருங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் சோக முடிவுரை எழுதப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் என்பது கட்சியல்ல.. அது ஒரு உணர்வு, கலாச்சாரம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். நான் இந்தியாவை காங்கிரஸ் முக்தி பாரத் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க நினைக்கிறேன்.

காங்கிரசை இவர்கள் உணர்வு, கலாச்சாரம் என்கிறார்களே.. அந்த உணர்வு, கலாச்சாரத்தை இந்த நாட்டில் இருந்து அகற்ற நினைக்கிறேன்.. என்னை பொறுத்தவரை அதுதான் காங்கிரஸ் முக்தி பாரத் என்று பிரதமர் மோடி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் 2019 ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் குறிப்பிட்டு இருந்தார்... அவரின் அந்த கனவு தற்போது நிறைவேற போவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

வரலாறு

வரலாறு

வரலாற்று ரீதியாகவே காங்கிரசை கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பாஜக தலைவர்கள் இருந்த போதும் சரி, அதன்பின் ஜனதா கட்சி இயங்கி வந்த போதும் சரி, இப்போதும் காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் நோக்கம். சுதந்திர போராட்டத்திற்கு முன்பில் இருந்து கூட ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களின் ஒரே நோக்கம் இதுவாகவே இருந்தது.

முடியவில்லை

முடியவில்லை

ஆனால் எவ்வளவு பெரிய ஜன சங்க தலைவர்களாலும் அதை சாதிக்க முடியவில்லை. அத்வானி - வாஜ்பாய் இணைந்து காங்கிரசுக்கு எதிராக ஒரு அலையை கொண்டு வந்தாலும் கூட அவர்களால் காங்கிரஸ் முக்தி பாரத் என்ற நிலையை கொண்டு வர முடியவில்லை. ஆனால் 2014 லோக்சபா தேர்தலுக்கு பின்பாகவே காங்கிரஸ் சந்திக்கிற தேர்தலில் எல்லாம் மிகப்பெரிய அடியை வாங்கிக்கொண்டு இருக்கிறது. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட தேர்தலில் கூட எம்எல்ஏக்களை இழந்து ஆட்சியை துறக்கும் நிலைக்கு அக்கட்சி சென்றுள்ளது.

மாநில தேர்தல்

மாநில தேர்தல்

இப்போதும் இந்த 5 மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. தற்போது வரை வந்த நிலவரப்படி உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்க உள்ளது.

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் 271 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உ.பி.யில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. சமாஜ்வாதி கட்சி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பரிதாபமாக வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சிரோமணி அகாலி தளம் 9 இடத்திலும் பாஜக கூட்டணி 5 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

கோவா: பெரும்பான்மைக்கான 21 இடங்களை எந்த கட்சியும் இதுவரை பெறவில்லை; பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 3 இடங்களிலும் ஆம் ஆத்மி 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன

உத்தரகாண்ட்: பாஜக பெரும்பான்மையை தாண்டி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரகாண்ட்டில் பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை. காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மணிப்பூரில் பாஜக 28 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

லோக்சபா - சட்டசபை நிலவரம்

லோக்சபா - சட்டசபை நிலவரம்

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி இந்திய அளவில் காணாமல் போக தொடங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்றது. காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே வென்றது. தேசிய அளவில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் மாநில அளவிலும் கூட்டணிகளோடு சேர்ந்து 5 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.

2 மாநிலம்தான்

2 மாநிலம்தான்

ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சி அமைத்து வருகிறது. இது போக ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் நேரடியாக தங்கள் முதல்வர்களோடு ஆட்சி செய்து வருகிறது. மற்றபடி மாநில கட்சிகள், பாஜக கூட்டணிதான் மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. 2 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் மிக மோசமாக சுருங்கிவிட்டது.

நிறைவேறுகிறதா

நிறைவேறுகிறதா

இதன் மூலம் பாஜகவின் அந்த பல ஆண்டு கனவான.. காங்கிரஸ் முக்தி பாரத் கனவு நினைவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய தலைவர்கள் செய்ய முடியாததை மோடி சாதிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.. இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் நேரடியாக ஆட்சி செய்யும் நிலையில் அங்கும் கூட எப்போது வேண்டுமானாலும் பாஜக வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. ஒருநாடு ஒரு தேர்தல் நடக்கும் பட்சத்தில் அங்கும் கூட காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் பட்சத்தில் இந்திய அளவில் காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத பரிதாப நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+