ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் அமர கடும் போட்டி உள்ளது. 12 முறை ஒருவர் ஃபெயிலான நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் உள்ள ரிஸ்க்கான மறுபக்கம் பலருக்கும் தெரியவந்துள்ளது. அதுபற்றி இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர்பதவிகளை பெற வேண்டும் என்றால் மத்திய தேர்வாணையம் நடத்தம் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 3 நிலைகளை தாண்டி தான் தேர்ச்சியடைய முடியும்.

அதாவது யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர் முதலில் முதல்நிலை தேர்விலும், இரண்டாவதாக முதன்மை தேர்வுகளிலும் தேர்ச்சியடைய வேண்டும். அதன்பிறகு நேர்க்காணலிலும் (இண்டர்வியூ) அவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த 3 படிநிலைகளை தாண்டினால் தான் ஒருவரால் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளில் அமர முடியும்.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுக்கான ரிசல்ட் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 1,016 பேர் தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தான் ஒருவர் 12வது முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் கடைசி ரவுண்டான நேர்க்காணலில் 9 மதிப்பெண் குறைவாக எடுத்த தேர்ச்சி பெறவில்லை.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு என்பது தற்போது பலருக்கும் விடா முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறி உள்ளது. ஆனாலும் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் குணால் ஆர் விருல்கார் என்பவர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி 12வது முறையாக தோல்வியடைந்துள்ளார். இந்த முறை அவர் நேர்க்காணல் வரை சென்ற நிலையில் 9 மதிப்பெண்ணில் வாய்ப்பை பறிகொடுத்துள்ளார். இதனால் அவரால் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பெரிய பதவிகளுகளை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இந்த தேர்வில் சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். சிலர் 2, 3, 4வது முயற்சிகளில் கூட வெற்றி பெறுவார்கள். ஆனால் பலர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தவிக்கின்றனர் என்பது தான் முற்றிலும் உண்மை.
இந்நிலையில் தான் குணால் தனது எக்ஸ் பக்கத்தில், யுபிஎஸ்சி நேர்க்காணலுக்கு சென்ற போட்டோவை பதிவிட்டு, ‛‛12 முயற்சிகள், 7 முறை மெயின்ஸ் தேர்வு, 5 முறை நேர்க்காணலில் பங்கேற்றும் இன்னும் தேர்வாகவில்லை’’ என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேவேளையில் பலரும் கூட மீண்டும் மீண்டும் தோற்றாலும் உங்களின் முயற்சி உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வினோத் காப்ரி, ‛‛என் இதயம் நொறுங்கிவிட்டது. ஆனால் கண்டிப்பாக நான் இதை சொல்லியே ஆக வேண்டும். உங்களின் பயணம் என்பது எத்தனையானது என்ன? மிகவும் அருமையான பயணம். உங்களின் பயணம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. இது உங்களுக்கு அதிக ஆற்றலை தந்திருக்கும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ என தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி அவானிஷ் ஷரன் கூறுகையில், ‛‛உறுதியான மனஉறுதி உங்களிடம் இருப்பதாக நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் ஐஏஎஸ் அதிகாரி மனுஷ் ஜிந்தால், ‛‛உங்கள் இலக்கை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை உங்கள் மன உறுதியில் இருந்து என்னால் சொல்ல முடியும். வாழ்த்துகள். நான் உங்களுக்கு எப்படி உதவ வேண்டுமோ? சொல்லுங்கள். உதவி செய்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி பீஷாம் சிங் கூறுகையில், "கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இதை விட பெரிய இலக்கை நீங்கள் அடைவீர்கள்'' என்றார். இப்படி 12 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்துள்ள குணால் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர். இவர் தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இப்படி பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிலர் நீங்கள் இனி யுபிஎஸ்சியில் கவனம் செலுத்தாமல் வேறு இலக்கை நோக்கி செல்லலாம் என அட்வைசும் தெரிவிக்கின்றனர். அதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காகவே இளமைக்காலத்தை நீங்கள் செலவிட்டு உள்ளீர்கள். இனியும் வேண்டாம் என அவருக்கு அட்வைஸ் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இந்த அட்வைசின் பின்னணியிலும் பெரிய உண்மை உள்ளது. அதாவது பலரும் யுபிஎஸ்சி தேர்வுக்காக இளமை காலத்தை இழந்து விடுவது உண்மை தான். உதாரணமாக கடந்த 2023ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் முதல்நிலை தேர்வில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 14,624 பேர் முதன்மை நிலைக்கு தேர்ச்சி பெற்றனர். அதன்படி பார்த்தால் 0.11 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைவாகும்.
மேலும் முதன்மை தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களிடம் நேர்க்காணலில் பங்கேற்ற நிலையில் மொத்தம் 1016 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது விண்ணப்பித்த 13 லட்சம் பேரில் 1016 பேர் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது 0.078 சதவீதமாகும். அதன்படி பார்த்தால் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோரில் 12, 700 பேரில் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்.ஆனாலும் கூட குணால் போன்றவர்கள் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியை எட்டிப்பிடிக்க முயன்று வருவது என்பது சிறப்பான முயற்சியாக பார்க்கப்பட்டாலும் 12 முறை தேர்வு எழுதியும் பணிக்கு தேர்வாகவில்லை என்பது அவர்களின் இளமை காலத்தை யுபிஎஸ்சி தேர்வு என்ற ஒன்றே குடித்து விட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications