இஷ்ரத் ஜகான் வழக்கு.. ஐபிஎஸ் சதிஷ் சந்திர வர்மா டிஸ்மிஸ் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
டெல்லி: ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மாவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து வெளியிடப்பட்ட உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் 1 வாரம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
2004ல் நடைபெற்ற இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் போலியானது என்று 2011ல் ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற வேண்டிய ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி டிஸ்மிஸ் செய்தது.

இதையடுத்து தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் முடிவிற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்தது. அதே சமயம் அந்த முடிவை நேற்று வரை ( திங்கள் கிழமை) தள்ளி வைப்பதாக அறிவித்தது.
ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மாவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து வெளியிடப்பட்ட உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் 1 வாரம் இடைக்கால தடை விதித்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேஎம் ஜோசப், ஹ்ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு இந்த இடைக்கால தடையை விதித்து உள்ளது. அதோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா தரப்பு தொடர்ந்து வாதங்களை மேற்கொள்ளலாம். உடனே இதில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மாவை டிஸ்மிஸ் செய்தது சரியா அல்லது தவறா என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா சார்பாக கபில் சிபல் ஆஜர் ஆனார். ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா டிஸ்மிஸ் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், அல்லது உயர் நீதிமன்றம் இதில் உடனடியாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மாவின் டிஸ்மிஸ் வழக்கில் டிஸ்மிஸை தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் செப்டம்பர் 7ம் தேதி இடைக்கால உத்தரவு வழங்கி உள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை அடுத்த ஜனவரியில் தான் நடக்கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதற்கு இடையில் செப்டம்பர் 30ம் தேதியே ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா பதவிக்காலம் முடிவு பெறுகிறது. அப்படி இருக்கும் போது வழக்கை அடுத்த ஜனவரி விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கபில் சிபல் வாதம் வைத்தார். ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா அவசரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவரின் மனுவை மட்டும் விசாரிக்க தாமதம் செய்கிறார்கள். அரசு அதிகாரிக்கு எதிராக இப்படி அவசரமாக முடிவு எடுத்தது பல கேள்விகளை எழுப்புகிறது.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் போலீஸ் என்கவுண்டர் தொடர்பான உண்மைகளை வெளியிட்டதால் தான் பழிவாங்கப்படுவதாக ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா தெரிவித்தார். நான் இந்த வழக்கில் சிபிஐக்கு ஆதரவாக செயல்பட்டால், அப்போதைய குஜராத் அரசு என் மீது கோபமாக இருந்தது. இதனால் நான் இப்போது பழிவாங்கப்படுகிறேன் என்று ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மா தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், ஐபிஎஸ் அதிகாரி சதிஷ் சந்திர வர்மாவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து வெளியிடப்பட்ட உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் 1 வாரம் இடைக்கால தடை விதித்து உள்ளது.












Click it and Unblock the Notifications