சூர்ய காந்த புயல் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல் 1.. இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டதா? இஸ்ரோ விளக்கம்
டெல்லி: ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்த புயல்களின் முக்கியமான தரவுகளை சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த தரவுகள் குறித்தான் முழுமையான புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரிய காந்த புயல் பூமியில் மிகப்பெரிய அளவில் தாக்கியது. இது குறித்தான எச்சரிக்கையை நாசா மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் எச்சரித்து இருந்தனர். குறிப்பாக செயற்கை கோள்கள், தகவல் தொடர்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்த புயல்களின் முக்கியமான தரவுகளை சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த தரவுகள் குறித்தான் முழுமையான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள அஸ்பெக்ஸ் என்ற அறிவியல் ஆய்வு கருவியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலமாக பூமிக்கு சூரியனில் இருந்து அதிகளவில் காந்த புயல் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் பூமியின் துருவப் பகுதி அதிகளவில் பாதிப்புக்குள்ளானதாக ஆதித்யா எல் 1 அனுப்பிய தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூரிய காந்த புயல் இது என்றும், தற்போது ஏற்பட்ட சூரிய காந்த புயல் பூமியின் உயர் அட்ச ரேகையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
குறிப்பாக இந்த சூரிய காந்த புயலால் இந்திய பகுதி குறைந்த அளவே பாதிக்கப்பட்டது எனவும் இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது. ஏனென்றால், குறைந்த அட்சரேகை பகுதியில் இந்தியா இருப்பதால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும், பசிபிக் மற்றும் அமெரிக்க பகுதியில் சூரிய காந்த புயல் கடும் விளைவுகளை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணிற்கு அனுப்பியது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் இருந்து ஆதித்யா விண்கலம் சூரியனை ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் காந்த புயல் குறித்த முக்கிய தரவுகளை ஆதித்யா விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக இந்தியா சார்பில், இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா? அல்லது சூரிய காந்தப் புயலால் ஏதேனும் சேதம் அடைந்ததா? பாதிக்கப்பட்டதா என்பதையும் தொடர்ந்து ஆதித்யா எல் 1 விண்கலம் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் சந்திரயான் 2 திட்டத்தின் உந்துவிசை கலன் நிலாவில் சுற்றி வருகிறது. இந்த உந்துவிசை கலனும் தற்போது சூரியனை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 மற்றும் சந்திரயான் திட்டம் 2ன் உந்துவிசை கலன் தரவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications