இது இயற்கை பேரிடர்... உத்தரகாண்ட் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது : நிர்மலா சீதாராமன்
டெல்லி : உத்தரகாண்டில் நடைபெற்ற இயற்கை பேரிடர் அதிர்ச்சி அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்டில் பனிப்பாறை உருகி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சமோளி ஆற்றில் மின் திட்டத்திற்காக பணியாற்றிய 150 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 100 முதல் 150 பேர் இதில் மாயமாகி இருக்கலாம் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது போன்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது இயற்கை பேரிடர். உத்தரகாண்ட் அரசிற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் எந்த தயக்கமும் இன்றி தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.
மாநில பேரிடர் குழுவினரும் ஜோஷிமத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல் டேராடூன் வரையில் வான்வெளியாக தேடவும் 3 முதல் 4 படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications