வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை.. உச்ச நீதிமன்றம்
டெல்லி : வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை என்று மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும் போது, நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. 60% க்கும் அதிகமான மக்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரே உத்தரவின் மூலம் முழு நாட்டிற்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று மனுதாரரை பார்த்து கேட்டதுடன், இது நிர்வாக ரீதியான விவகாரம், இந்த விவகாரத்தில் அரசின் கொள்கையை மாற்ற உத்தரவிட முடியாது.
லடாக்கில் ஒரு மாதிரியும் , கேரளாவில் வேறுமாதிரியும், உத்தரபிரதேசத்தில் நிலைமை ஒரு மாதிரியும், வேறு வேறானவை. ஒவ்வொரு மாநிலமும் வித்தியமானவை. நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் இருந்து நிலைமை வேறுபட்டது . மிகப்பெரிய இந்த நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வகையான பிரச்சினைகள் உள்ளன என்று நீதிபதிகள் கூறினர்.
தடுப்பூசி தொடர்பாக காலவரையறை கேட்ட மனுதாரரின் கோரிக்கைக்கு பதில் அளித்த நீதிபதிகள். இந்த சோதனையான நேரங்களில் அரசு அதிகாரிகள் அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொண்டுள்ளோம். அவர்கள் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் சப்ளைகளைத் தேட வேண்டும், மற்ற அம்சங்களைப் பார்க்க வேண்டும். நீதிமன்றம் ஏற்கனவே சுய மோட்டு நடவடிக்கைகளின் கீழ் நிலைமையை கண்காணித்து வருகிறது.
Recommended Video
நாட்டில் உள்ள பன்முகத்தன்மையின் பின்னணியில்,தடுப்பூசியை அனைவருக்கும் உடனே தர வேண்டும் என ஒரே உத்தரவின் மூலம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை . எந்த புதிய வழிகாட்டுதலும் அரசாங்கத்தின் தற்போதைய தடுப்பூசி கொள்கையை பாதிக்கக்கூடாது என்று கூறி நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கைய நிராகரித்தனர்.












Click it and Unblock the Notifications