மீண்டும் பூதாகரமாக கிளம்பும் ஹிண்டன்பர்க் சர்ச்சை! நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: பங்கு சந்தையில் அதானி நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு அறிக்கை வெளிட்டது. இந்நிலையில் இதற்கு எதிராக செபி ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எழலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த முறைகேடுகள் காரணமாக அதானி சட்டவிரோதமாக ஒரு பெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும், இதனால் மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக அதானியின் பங்குகள் வரலாறு காணாத அளவில் சரிந்தன. அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த சிறு குறு நிறுவனங்களும் இதனால் இழப்பை சந்தித்தன. இது பொருளாதார வளர்ச்சியில் அடிவாங்கியது.
இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், தற்போது இது குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் செபிதான். செபி கடந்த 27ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு ஷோ காஸ் நோட்டீஸை அனுப்பியிருந்தது. இதில், இந்திய அரசின் விதிகளை மீறியது குறித்து விளக்கம் அளிக்க கேட்டிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க், "இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களால் நடத்தப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதிப்படுத்தவும் மிரட்டவும் நடைபெறும் முயற்சி இது" என்று கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை அடுக்கியிருந்தார். இப்படி இருக்கையில் இன்று ஹிண்டன்பர்க் குறித்த விவாதங்கள் எழலாம் என்று சொல்லப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications