இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்? சீரம் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் மூன்று மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத காரியம் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதுதான் தட்டுபாடு ஏற்பட காரணம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

மூன்று ஆண்டுகள் ஆகலாம்
இந்நிலையில், இது குறித்து சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டு, மூன்று மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத காரியம். இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில், இப்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏற்றுமதி ஏன்
இந்தியாவில் முதலில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது நம்மிடம் போதியளவு தடுப்பூசிகள் இருந்தன. நாட்டில் கொரோனா பாதிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைவாகவே இருந்தது. அப்போது தடுப்பூசி பணிகள் இந்தியாவில் வெற்றிகரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. ஆனால், உலகின் பல்வேறு நாடுகளிலும் அப்போது வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது, தடுப்பூசிக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

எங்கு இருந்தாலும் நமக்கு ஆபத்து
அந்த சமயத்தில் உலக நாடுகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை இந்தியா செய்தது. மத்திய அரசு உலக நாடுகளுக்கு அளித்திருந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஒரு போதும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் என்பது ஒரு நாட்டில் உள்ளவர்கள் மட்டும் வரும் என்றில்லை. உலகின் எந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஆபத்துதான்.

அதிக தடுப்பூசிகள் டெலிவரி
சீரம் நிறுவனம் இதுவரை 20 கோடி தடுப்பூசிகளை டெலிவரி செய்துள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி பணிகள் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அதிக அளவிலான தடுப்பூசிகளை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். சர்வதேச அளவில் பார்த்தால் அதிக தடுப்பூசிகளை டெலிவரி செய்த நாடுகளில் நிச்சயம் இந்தியா முதல் மூன்று இடங்களில் இருக்கும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications