அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 8-வது ஊதியக் குழு அமலாக்கம் மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய நிலுவைத் தொகை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். அதன்படி, 7-வது ஊதியக் குழுவின் காலக்கெடு டிசம்பர் 31, 2025-டன் முடிவடைந்ததால், 8-வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும்.

இருப்பினும், மத்திய அரசு இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட சில மாதங்கள் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், ஜனவரி 1, 2026 முதல் அது அமல்படுத்தப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட மாதங்களுக்கான சம்பள உயர்வு, ஊழியர்களுக்கு 'ஒட்டுமொத்த நிலுவைத் தொகையாக' வழங்கப்படும்.
நிலுவைத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஊழியர்களின் புதிய அடிப்படைச் சம்பளம் மற்றும் நிலுவைத் தொகை எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதில் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அரசுத் தரப்பில் இறுதி ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 2.28 முதல் 2.86 வரை இருக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதில் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் (Fitment Factor) என்பது ஒரு 'மேஜிக் எண்' போன்றது. அதாவது எத்தனை மடங்கு சம்பளம் உத்தரப்பட வேண்டும் என்பதை இந்த நம்பரை வைத்துதான் கணக்கிடுகிறார்கள்.
தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ₹18,000 ஆக உள்ளது. ஊழியர் சங்கங்கள் 3.68 மடங்கு உயர்வு கேட்கின்றன. அப்படியெனில், இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமே நேரடியாக ₹66,240 ஆக உயரும். அதாவது, ஒரே அடியாக ₹48,240 வரை அடிப்படைச் சம்பளத்தில் மட்டும் உயர்வு கிடைக்கும். இதில் 3.68 என்பதுதான் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் நம்பர்.
ஊழியர்களுக்கு எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும்?
அரசு ஊழியர்களின் பதவி நிலைகளைப் பொறுத்து, தோராயமாக ₹5 லட்சம் முதல் ₹14 லட்சம் வரை நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு (உதவியாளர்கள், பியூன்கள்) தற்போதைய அடிப்படைச் சம்பளம் (7th CPC) ₹18,000. 3.68 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் படி புதிய சம்பளமாக ₹66,240 கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மாதாந்திர சம்பள உயர்வு வித்தியாசம் ₹48,240. அப்படியெனில், மதிப்பிடப்பட்ட நிலுவைத் தொகை 10 மாத கால தாமதம் ஏற்பட்டால், அகவிலைப்படி (DA) இல்லாமல் தோராயமாக ₹4,82,400 (சுமார் ₹5 லட்சம்) வரை நிலுவைத் தொகையாகக் கிடைக்கும்.
இதுவே உயர் அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டால், தற்போதைய அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் ₹2,50,000.
- 3.68 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் படி புதிய சம்பளம்: ₹9,20,000
- மாதாந்திர சம்பள உயர்வு வித்தியாசம்: ₹6,70,000
- மதிப்பிடப்பட்ட நிலுவைத் தொகை: வெறும் 2 மாத காலத் தாமதத்திற்குக்கூட இவர்களுக்கு ₹13,40,000 (சுமார் ₹14 லட்சம்) வரை நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
பேச்சுவார்த்தை
8-வது ஊதியக் குழு தற்போது பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஊழியர் அமைப்புகள் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஜூன் 15 வரை நீட்டித்து ஊதியக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுவே இறுதிக்கெடு என்பதால், இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications