விமானத்தில் ஜெய்ஹிந்த் முழக்கம்… ஏர் இந்தியா நிர்வாகம் அதிரடி
Recommended Video

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க அந்த விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு முறையும் அறிவிப்புகள் வெளியிட்டு முடிக்கும் போது 'ஜெய்ஹிந்த்' என்று தேசத்தை போற்றும் முழக்கத்தை ஒலிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசபக்தி அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அஸ்வனி லோகானி, முதன் முறையாக மே மாதம் 2016 ஆம் ஆண்டில் விமானிகளுக்கு இதேபோன்ற உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தேசத்தின் மனநிலை" (mood of the nation) என்பது போல் தற்போதைய பணியாளர்களுக்கு நினைவூட்டல் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications