சாலைகளில் காற்று சுத்திகரிப்பான்கள்.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்! காரணம் இதுதான்
டெல்லி: ராஜஸ்தானில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த காற்று சுத்திகரிப்பான்கள் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது காற்றை சுத்தம் செய்யும் என்றாலும் கூட, நெட்டிசன்கள் இதை கடுமையாக கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.
ஜெய்ப்பூரில், ஜவஹர் சர்க்கிள் மற்றும் டோங்க் சாலை போன்ற அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் இந்த ராட்சத காற்று சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. "PAMARES" பாணியிலான 4 யூனிட்கள், ஒவ்வொன்றும் 8 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டு, சுற்றியுள்ள காற்றை வடிகட்டும் பணியைச் செய்கின்றன.

அதிகாரிகள் கூற்றுப்படி, ஒவ்வொரு சுத்திகரிப்பானும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லியன் கன மீட்டர் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளுக்கு இடையில் இரவோடு இரவாக நிறுவும் பணிகள் நடைபெற்றன. நவ.15 முதல் இது செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ராம்பாக் தெருவில் ஒரு கூண்டு போன்ற அமைப்பிற்குள் வைக்கப்பட்டிருந்த பெரிய சுத்திகரிப்பான் குறித்த வீடியோ 'X' தளத்தில் வைரலானது. இந்த ஐடியா நிஜமாவே பலன் கொடுக்குமா அல்லது சும்மா எதையாவது வைக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு x பயனர், "சாலைகளில் காற்று சுத்திகரிப்பான்களா? சட்டசபைகளிலும் மூளை சுத்திகரிப்பான்களை நிறுவுங்கள்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மற்றொருவர், "இது முட்டாள்தனமான யோசனை" என்று கூறியுள்ளார். இன்னொரு பயனர், "இது பயனற்ற யோசனை, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. முடிந்தவரை மரங்களை நடுவதே நல்லது, அவை இயற்கையான சுத்திகரிப்பான்களாக செயல்படும்." மற்றொருவர், இது சூரியனில் எரியும் தீயை, அணைக்க தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்துவதை போல் உள்ளது" என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பான் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள குறுகிய பகுதியில் உள்ள காற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய இவை உதவும். குறிப்பாக 4 முனை சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் வாகனங்கள் நின்று இயங்கும்போதும், புறப்படும்போதும் ஏற்படும் புகை மாசுபாட்டைக் குறைக்க இது உதவும். இவை PM10, PM2.5 போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களை வடிகட்ட வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு காற்று சுத்திகரிப்பான் அது வைக்கப்பட்ட இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே காற்றைச் சுத்தப்படுத்த முடியும். முழு நகரம் அல்லது பெரிய சுற்றுவட்டச் சாலையின் மொத்தப் பரப்பளவைச் சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கான சுத்திகரிப்பான்கள் தேவைப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications