48 மணி நேரத்தில்.. இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.. சொல்வது ஜெய்ராம் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நிறைவு பகுதியை எட்டியுள்ள நிலையில், "இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், பிரதமரை 48 மணி நேரத்தில் தேர்ந்தெடுப்போம்" என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

Lok Sabha Election 2024 India Alliance Congress

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,

ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது ஜூன் 1ம் தேதி 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. எனவே இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகின்றன.

உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4 தொகுதிகள்) என ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான பிரசாரங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் தொக்காக 80 தொகுதிகள் இருக்கின்றன. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உ.பியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எனவே பாஜக சுற்றி சுற்றி இங்கு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதேபோல காங்கிரசும் முடிந்த வரை இந்த மாநிலங்களில் தங்களுக்கான வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது அக்கட்சியிலிருந்து பல தலைவர்கள் விலகி சென்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருந்த பல மாநிலங்களை காங்கிரஸ், ஆம் ஆத்மியிடமும் பாஜகவிடமும் இழந்திருக்கிறது. குஜராத்தில் அம்மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங், மிலிந்த் தியோரா, குலாம் நபி ஆசாத், பிரசாதா உள்ளிட்டோர் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எனவே இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த இந்த கூட்டணியே காங்கிரஸ் மீதான விமர்சனங்களை அதிகமாக உருவாக்கிவிட்டது. காரணம் இந்த கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட்வில்லை. பாஜக இதனை கடும் விமர்சனமாக கையில் எடுத்திருக்கிறது.

இப்படி இருக்கையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் 48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அதாவது, "இந்தியா கூட்டணி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை கடந்து வெற்றி பெறும். வெற்றி பெற்றவுடன் அடுத்த 48 மணி நேரத்தில் பிரதமரை தேர்ந்தெடுப்போம். அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சி தலைமைக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது, என்டிஏ கூட்டணியிலிருந்து சில கட்சிகள் எங்களுடன் சேர முயற்சிக்கலாம். அப்போது அது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்" என்று கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+