திடீரென தாலிபான் அமைச்சருக்கு போன் போட்ட அமைச்சர் ஜெய்சங்கர்.. பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட பெரிய செக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் ஆப்கான் தாலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைப்பேசி மூலம் பேசினார். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் நிர்வாகத்துடன் இந்தியா கலந்துரையாடுவது இதுவே முதல்முறை. இந்தியா ஆப்கான் உறவை மேம்படுத்தச் சிறந்த தொடக்கப் புள்ளியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்தத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைப் பிடித்த நிலையில், அதன் பிறகு இரு தரப்பு உறவை மேம்படுத்தத் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Jaishankar Afghanistan India

அமைச்சர் ஜெய்சங்கர்

இதற்கிடையே இந்தியா- தாலிபான் உறவில் இப்போது மிக முக்கியமான ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது நமது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் தாலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைப்பேசி மூலம் பேசியுள்ளார். இது இந்தியா ஆப்கான் உறவை மேம்படுத்தச் சிறந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும்,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 26 அப்பாவி பொதுமக்களை பஹல்காம் பள்ளத்தாக்கில் வைத்துச் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்திற்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் பேசியுள்ளார்.

ஜெய்சங்கர் கருத்து

இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "இன்று மாலை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகி உடனான உரையாடல் சிறப்பாக இருந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி.! இந்த உரையாடலின்போது ஆப்கானிஸ்தான் மக்களுடனான நமது (இந்தியா) பாரம்பரிய நட்பையும், அவர்களின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்டேன். இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்" என்றார்.

ஏன் முக்கியம்?

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குத் தாலிபான்களே காரணம் என முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தானின் இந்த கருத்து பொய்யானது என்பதைக் காட்டும் வகையிலேயே ஆப்கானிஸ்தான் கண்டனம் அமைந்திருந்தது. ஏனென்றால் ஆப்கான் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்திருந்தால் தாக்குதலுக்குத் தொடர்பு என்பது போல ஆகியிருக்கும். இதன் காரணமாகவே ஆப்கானின் கண்டனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதை வரவேற்ற அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகள் மூலம் இந்திய ஆப்கான் உறவில் சிக்கலை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆப்கான் முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தாலிபான்கள் சொல்வது என்ன

இரு தரப்பிற்கும் இடையே நடந்த கலந்துரையாடல் தொடர்பாகத் தாலிபான் தகவல் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமதும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா செல்லும் ​​ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக மருத்துவ உதவியை நாடுபவர்களுக்குக் கூடுதல் விசாக்களை வழங்குமாறு ஜெய்சங்கரிடம் முத்தாகி கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இருதரப்பு வர்த்தகம், இந்தியச் சிறைகளில் உள்ள ஆப்கானிய கைதிகளை விடுவித்தல் மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாஹர் துறைமுகம்

இதில் சபாஹர் துறைமுகம் குறித்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்துவதாக அறிவித்தது. ஆப்கானுக்குச் சரக்குகள் செல்ல அது பாகிஸ்தான் வழியாகவே செல்ல வேண்டும் என்பதால் அதுவும் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சபாஹர் துறைமுகம் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் அது 1947 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூலம் துண்டிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்திற்கான ஒரே வழி ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் வழியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+