ஐநா கூட்டத்தில் கம்பீரமாக ஒலித்த இந்தியாவின் குரல்.. ஜெய்சங்கர் சொன்ன அந்த பாய்ண்ட் தான் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஜி20 புது டெல்லி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியமானவை என்று 78வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல் எனும் தலைப்பின் கீழ் தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தில் சுமார் 145 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றிருக்கிறார். இந்த கூட்டத்தில் கனடா விவகாரம் குறித்து இந்தியா பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaishankar said the decisions taken at the New Delhi G20 summit are important for the Sarveshad community

இந்த கூட்டத்தில் தனது உரையை தொடங்கிய ஜெய்சங்கர், "பாரதத்தில் இருந்து நமஸ்தே! நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல் எனும் கருபொருளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கிறது" என்று கூறினார். மேலும், "புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் முக்கியமானவை. இந்தியாவின் தீவிர முயற்சியால் ஆப்பிரிக்கா ஒன்றியம் ஜி20 நாடுகளின் பட்டியலில் நிரந்தர உறுப்பினராக இணைந்துள்ளது.

நீண்ட காலமாக அனுமதி மறுக்கப்பட்ட ஒரு கண்டத்திற்காகவும் நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். இந்தியா அமிர்த காலத்தில் நுழைந்துவிட்டது, சந்திரயான் 3 வெற்றி இதன் வெளிப்பாடுதான். உலக நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விஷயத்தில் முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். அதேபோல நிறவெறி போன்ற பாகுபாடுகளையும், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவற்றையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Jaishankar said the decisions taken at the New Delhi G20 summit are important for the Sarveshad community

இந்தியாவை பொறுத்த வரையில் நாங்கள் ஒருகாலத்தில் அணிசேரா கொள்கையில் இருந்தோம். தற்போது உலகின் நண்பனாக பரிணமித்துள்ளோம். பல்வேறு நாடுகளுடன் நாங்கள் கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறோம். அதேபோல நாங்கள் எங்கள் நாட்டின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களில் 3ல் ஒரு பங்கை பெண்களுக்கு கொடுத்திருக்கிறோம். ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் எனும் விஷயத்தில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கிறது. முன்பு இருந்த காலசூழல் தற்போது கிடையாது. ஒரு சில நாடுகள் நிகழ்ச்சி நிரலை வகுத்து, மற்ற நாடுகள் அதை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாட்கள் முடிந்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+