Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சட்டமே இருக்கு.." ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள்.. பீட்டா அமைப்புகள் சுப்ரீம் கோர்டில் பரபர வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளைத் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்டில் தொடர்ந்த வழக்கில் பரபர வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

கடந்த 2011இல் காட்சி விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி, சிறுத்தை, உள்ளிட்ட விலங்குகளுடன் காளைகளும் சேர்க்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடைபெற முடியாமல் போனது.

மிருக வதை தடுப்பு சட்டத்தையும் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராகக் கடந்த 2017இல் மெரினாவில் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

அதன் பின்னரே, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாக நடந்து வரும் நிலையில், இந்த அவசர சட்டத்திற்குத் தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மீண்டும் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தன. ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் நடைபெறும் கம்பாலா போட்டிகளுக்கும் இவர்கள் தடை கோரி இருந்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கேள்வி

கேள்வி

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன் வைத்தனர். இதற்கிடையே மனிதர்கள் காயப்படுகிறார்கள், உயிரிழக்கிறார்கள் என ஜல்லிக்கட்டுக்குத் தடை கேட்கும் நீங்கள் குத்துச்சண்டைக்கும் தடை கேட்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை எனப் பதிலளித்த வழக்கறிஞர், குத்துச்சண்டைக்குத் தடை விதிக்கப்படும் என்றால் வழக்கையே திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

 காளைகள் சாதுவானவை

காளைகள் சாதுவானவை

தொடர்ந்து வழக்கறிஞர் வாதிடுகையில், "காளைகள் மிகவும் சாதுவானவை. அது அச்சுறுத்தி இதில் கலந்து கொள்ள வைக்கப்படுகின்றது. வாடிவாசலில் காளைகள் முகத்தைப் பார்த்தாலே அவை எந்த அளவிற்கு அச்சத்துடன் உள்ளன என்பது தெரியும். காளைகள் மீது அளவு கடந்த வன்முறை நடத்தும் விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு.. கொரோனா காலத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட அடிப்படை விதிகளை கடைப்பிடிக்கப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதை கலாசாரம் என்றும் சொல்கிறார்கள். இருப்பினும், அதற்கான எந்தவொரு ஆவணத்தையும், ஆதாரங்களையும் அவர்கள் வழங்கவில்லை.

 மிருக வதை தடுப்பு சட்டம் இருக்கு

மிருக வதை தடுப்பு சட்டம் இருக்கு

சதி, குழந்தை திருமணம், விதவை மறுமணம் போன்றவை கலாச்சாரம் இருந்தபோதிலும் அவை அனைத்தும் அகற்றப்பட்டன குடிமக்கள் சிலர் இதை கலாசாரம் என்று கூறுவதால், அதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. வெறும் செயல்கள் மட்டும் கலாச்சாரம் என்று கூற முடியாது.. விலங்குகள் வதைப்பது இருக்கக் கூடாது என்பதை அரசியலமைப்பு அங்கீகரிக்கும் போது, இதுபோன்ற ஒரு விளையாட்டை அனுமதிக்க முடியாது. விலங்குகள் வதைப்பதைத் தடுப்பதை சட்டங்கள் பேசும் போது, மிருக வதையை அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது" என்றார்.

 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மேலும், மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களில் காளைகளைப் பயன்படுத்த தடை விதித்து 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் லூத்ரா, காளைகளை அடக்கும் விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இன்று வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

 பரபர வாதம்

பரபர வாதம்

முன்னதாக கடந்த வாரம் நடந்த விசாரணையில், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என சில புகைப்படங்களைக் காட்டி விலங்குகள் நல வாரியங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை வற்புறுத்தியே கலந்து கொள்ள வைப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், "இங்கேயும் விலங்குகளுக்கு விருப்பம் இல்லையென்றால் அதனால் சுதந்திரமாக இருந்துவிட முடியுமா? குதிரைப் பந்தயம் நடக்கிறது அந்த குதிரை அதனை மகிழ்வுடன் செய்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? கேரளாவில் யானைப் பந்தயம் நடத்தப்படுகிறது அது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+