களமிறங்கிய ரா படை.. பாகிஸ்தான் உள்ளே இந்திய "ஜேம்ஸ் பாண்டுகள்".. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
டெல்லி: பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் உளவாளிகள் படை.. ரா உளவுப்படை மூலம் தயார் செய்யப்பட்ட வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இப்போது இவர்கள் இன்னும் தீவிரம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் காரணங்கள் உள்ளன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

உளவு அவசியம்
இப்படி பாகிஸ்தான் போன்ற நாடு உள்ளே தாக்குதல் நடத்த உளவுத்தகவல்கள் அவசியம். இந்த தாக்குதலில் முக்கியமாக பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.
இப்படிப்பட்ட இடங்களை துல்லியமாக கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க ட்ரோன்கள் தாண்டி களத்தில் நிற்கும் உளவுப்படை அவசியம். அப்படி கிடைத்த உளவுத்தகவல் மூலமே இந்தியா இந்த துல்லிய தாக்குதல்களை நடத்தி உள்ளது. பாகிஸ்தான் உள்ளே பல வருடங்களாக இந்திய உளவு வீரர்கள் உள்ளனர்.
இப்போது இவர்கள் இன்னும் தீவிரம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் காரணங்கள் உள்ளன.
போர் வரலாம்
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தரலாம். பாகிஸ்தான் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முழு முதற் போர் வரும் வாய்ப்புகளும் உள்ளன. இதை கண்டுபிடிக்க, பாகிஸ்தான் செயல்பாட்டை முன்கூட்டியே அறிய உளவுப்படை அவசியம். இதற்காகவே இந்திய உளவு அதிகாரிகள் பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
போருக்கு தயார்
இன்னொரு பக்கம் நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் சில விஷயங்களை கண்டிப்பாக மேற்கொள்ளும். இதனால் இந்தியா நீண்ட போருக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications