காங்கிரசின் "அபகரிக்கும்" மனநிலை.. அதிர்ச்சி தந்த கார்கே பேச்சு.. அதிர வைக்கும் வரலாற்று ஆய்வு!
டெல்லி: காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தேசிய அளவில் அதிர்வலைகளை, விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரத்தை நிலைநாட்டும், என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு சில சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் ஆக்கிரமிப்பு மனநிலை அதிகம்.. இந்த நாட்டையே தங்களின் உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு மனப்பான்மை, அபகரிப்பு மனப்பான்மை அதிகம். வரலாற்று நெடுகிலும் அந்த கட்சிக்கு இருக்கும் அதே மனப்பான்மையைத்தான் தற்போது காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பேச்சு வெளிக்காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

இந்திய தேசிய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பலிகொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் மற்றும் ஆட்சியைப் அபகரிக்கும் மனநிலையை காங்கிரஸ் கட்சி எவ்வாறு தொடர்ந்து வெளிப்படுத்துகிறது என்பதை காட்டுவதற்கு பல வரலாற்று சான்றுகளும்.. எடுத்துக்காட்டுகளும் உள்ளன.
அபகரிக்கும் எண்ணம்: ஒரு வரலாற்று எடுத்துக்காட்டு
காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு நெடுகிலும்.. ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும். அதிகாரத்தில் நீடிக்க வேண்டும், எந்த எல்லைக்கும் சென்று அதிகாரத்தை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதற்கான திட்டங்களை, செயல்பாடுகளை செய்வதாக காங்கிரஸ் மீது பல முறை குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு உள்ளது.
காங்கிரசின் இந்த மனநிலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டே 1975ல் கொண்டு வரப்பட்ட.. அவசரநிலைதான். இந்திய ஜனநாயகத்தை கிள்ளுக்கீரையாக நசுக்கி, அரசியலமைப்பை மதிக்காமல், நீதிமன்றத்தை மதிக்காமல் காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களாக மாறின. அப்போது மட்டுமல்ல.. அதன்பின் வந்த காங்கிரஸ் அரசுகளும் அதிகாரத்தை தீவிரமாக பயன்படுத்தி மக்களின், எதிர் கட்சிகளின் உரிமைகளை நசுக்கின.
அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்று மட்டும் காங்கிரஸ் நினைக்கவில்லை. அதை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்... தனது அதிகாரத்தின் "கைகளை" எல்லா பக்கமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே காங்கிரஸ் அரசியல் கொள்கை. காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாக பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் சமூகங்கள் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட தொடர்ந்து முயன்றே வந்துள்ளது, பெரும்பாலும் பிளவுபடுத்தும் கொள்கைகள் மூலம் மக்கள் இடையே முரண்பாடுகளையும் அமைதியின்மையையும் விதைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ விதிகள் விதிக்கப்பட்டிருந்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்த சட்டங்களை காங்கிரஸ் நீக்காமல் போனதற்கு காரணங்கள் உள்ளன. குறிப்பிட்ட வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் வகையில்.. அங்கே இருக்கும் அரசுகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் இதை செய்தது. அதே சமயம் அங்கே பிரிவினைவாதத்தை ஒடுக்க தவறி.. பிரிவினை சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சட்டங்களை நீக்க தவறி.. தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து வந்தது. இந்தியாவின் ஒரு பகுதி என்று ஜம்மு காஷ்மீரை பார்க்காமல்.. தங்கள் "அதிகாரத்தின்" ஒரு பகுதியாக காங்கிரஸ் காஷ்மீரை பார்த்தது.
வக்ஃபு போர்டு பாணி செயல் முறை: கட்டுப்படுத்த தவறியது
கார்கேவின் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள WAQF வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அமைப்பான WAQF வாரியம், மத அதிகாரம் என்ற போர்வையில் நில அபகரிப்பில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் நலனுக்காக பெரும் நிலங்களையும் சொத்துக்களையும் கையகப்படுத்துவதாக புகார் உள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் தடுக்க தவறிவிட்டது.. வாக்கு வங்கியை மனதில் வைத்து இதை எல்லாம் காங்கிரஸ் தடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வந்தது.

வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இல்லாததால் விமர்சிக்கப்படுவதைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் அணுகுமுறையும் வெளிப்படைத்தன்மையின்மையால் விமர்சனங்களுக்கு உள்ளானது. தேர்தல் வெற்றிகளைப் பெற குறிப்பிட்ட சமூகங்களின் நலனை மட்டும் காங்கிரஸ் மனதில் வைத்து செயல்பட்டதாகவும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதால்.. வாக்கு வங்கியை மனதில் வைத்து வக்ஃபு வாரியத்தின் பலத்தை தடுக்காமல் காங்கிரஸ் தடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வந்தது.
370 & 35A சட்டப்பிரிவை மீட்டெடுக்க காங்கிரஸின் முயற்சி: பிளவுபடுத்தும் அரசியல்
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரத்தை நிலைநாட்டும், என்று கார்கே தெரிவித்துள்ளார். இதனால் எங்கே 370 & 35A சட்டப்பிரிவை மீட்டெடுக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2019 இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட இந்தக் சட்டங்கள், நீண்ட காலமாக இந்திய அரசியலில் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் தனித்துவத்தை பாதுகாப்பதாக கூறி இந்த விதிகளை காங்கிரஸ் அடிக்கடி பாதுகாத்து வந்தாலும், அவற்றின் உண்மையான தாக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிப்பதே ஆகும். மேலும் அங்கே தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கவும் இந்த சட்டங்கள் உதவும். இதைத்தான் பிரதமர் மோடி அரசு நீக்கியது.. ஆனால் இதை மீண்டும் கொண்டு வரும் திட்டங்களில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி இந்த சட்டங்கள் வந்தால்.. ஜம்மு காஷ்மீர் மீண்டும் பழைய பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும். தேசிய பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். பிரிவினை அரசியலை ஏற்படுத்தும், பிரிவினைவாத சக்திகளுக்கு வழி ஏற்படுத்தும், 10 வருடங்களாக அங்கே நடந்த முன்னேற்றங்கள் பின்னோக்கி செல்லும். இப்படிப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சட்டத்தைதான் மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் சொல்லாமல் சொல்லிக்கொண்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கே சிக்கல்; காங்கிரசின் ட்ராக் ரெக்காட்:
தேசிய பாதுகாப்பு, விவகாரத்தில் காங்கிரஸ் எப்போதுமே சொதப்பி வந்துள்ளது. முக்கியமாக குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் மிக அதிக அளவில் சொதப்பல்களை செய்துள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பில் காங்கிரஸ் அத்தனை சிறப்பாக செயலப்பட்டது இல்லை என்பதே நிபுணர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கருத்து. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கங்களின் கீழ் ஜம்மு காஷ்மீர் என்பது தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு புகலிடமாக இருந்தது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த பகுதி தீவிரவாதத்தின் எழுச்சியைக் கண்டது. பிரிவினைவாத கொள்கைகளை கொண்ட தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததும் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் இங்கே பாதுகாப்பு குறைந்து.. நிலைமை மோசமானது. தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்தன .
முடிவுரை:
எனவே, கார்கேவின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; அரசியல் ஆதாயத்திற்காக தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய காங்கிரஸ் தயாராக இருப்பதை காட்டுகின்றன. சட்டப்பிரிவு 370 மற்றும் 35A மீதான விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆதாயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பையே விட்டுக்கொடுக்க தயாராக உள்ளது... தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் நெருப்புடன் விளையாட கூட தயாராக உள்ளது.












Click it and Unblock the Notifications