Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Live Updates:காஷ்மீர் தலைவர்களுடன் மோடி இல்லத்தில் 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநில அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Jammu & Kashmir Leaders Meet With PM Modi Live Updates in Tamil

Jun 25, 2021, 12:05 am IST

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
Jun 25, 2021, 12:05 am IST

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே அரசின் முன்னுரிமை நோக்கமாகும் - பிரதமர் மோடி
Jun 25, 2021, 12:04 am IST

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு முற்போக்கான ஜம்மு-காஷ்மீரை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கியமான படியாகும் - பிரதமர் மோடி
Jun 24, 2021, 7:57 pm IST

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; இதை பிரதமரிடம் தெரிவித்தோம் - உமர் அப்துல்லா
Jun 24, 2021, 6:45 pm IST

பிரதமர் இல்லத்தில் காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது
Jun 24, 2021, 6:26 pm IST

டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் 3 மணி நேரமாக ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் ஆலோசனை காஷ்மீரில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 14 தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்பு
Jun 24, 2021, 5:11 pm IST

2 மணி நேரத்திற்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் மோடி ஆலோசனை தொடருகிறது உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் உடனுள்ளனர்
Jun 24, 2021, 4:39 pm IST

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து மோடியிடம் அரசியல் தலைவர்கள் ஆலோசனை ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும் ஆலோசனை
Jun 24, 2021, 4:32 pm IST

ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டம் 1 மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது
Jun 24, 2021, 3:30 pm IST

பிரதமர் மோடி இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
Jun 24, 2021, 3:20 pm IST

பாஜக தலைவர் ஜிதேந்திரசிங் வரவேற்புரையாற்றுவார்; அவரை தொடர்ந்து பிரதமர் மோடி தொடக்க உரையாற்ற உள்ளார்
Jun 24, 2021, 3:06 pm IST

பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிவிட்டு என் கருத்துகளை தெரிவிக்கிறேன்: பரூக் அப்துல்லா
Jun 24, 2021, 3:04 pm IST

ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் புஹாரி, பிரதமர் மோடி இல்லத்துக்கு வருகை
Jun 24, 2021, 2:45 pm IST

பிரதமர் மோடி இலத்துக்கு ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள் வருகை தந்தனர்
Jun 24, 2021, 2:40 pm IST

ஜம்மு காஷ்மீரில் தற்போது 200 தீவிரவாதிகள் உள்ளனர்; ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படும்: லெப். ஜெனரல் டிபி பாண்டே
Jun 24, 2021, 2:27 pm IST

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்துக்கு முரணாகவே மத்திய அரசு செயல்பட்டது; இனியாவது அரசியல் சாசனத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும்: சிபிஎம் தரிகாமி
Jun 24, 2021, 2:18 pm IST

பிரதமர் மோடியின் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா
Jun 24, 2021, 2:17 pm IST

பிரதமர் மோடியின் இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
Jun 24, 2021, 2:17 pm IST

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்: காங். தலைவர் குலாம் மிர்
Jun 24, 2021, 2:17 pm IST

அரசியல் சாசனத்தின் 370, 35 ஏ பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; உடனே தேர்தல் நடத்த வேண்டும்: குப்கர் கூட்டணி
Jun 24, 2021, 2:15 pm IST

பரூக் அப்துல்லா இல்லத்துக்கு சென்றார் உமர் அப்துல்லா
Jun 24, 2021, 2:14 pm IST

பிரதமர் மோடியின் முயற்சிகள் நல்ல தொடக்கம்- சிபிஎம் யூசுப் தாரிகாமி
Jun 24, 2021, 12:52 pm IST

குலாம்நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீர் காங். தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
Jun 24, 2021, 11:32 am IST

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பாஜக தலைமை அலுவலகம் வந்தார் ஜேபி நட்டா
Jun 24, 2021, 11:32 am IST

மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் எதை பற்றி பேச இருக்கிறோம் என்பதையே சொல்லவில்லையே... ஜம்மு காஷ்மீர் காங். தலைவர் குலாம் அஹமத் மீர்
Jun 24, 2021, 11:02 am IST

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: ஜம்மு காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங்
Jun 24, 2021, 10:34 am IST

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பாஜக தலைவர்களுடன் அக்கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆலோசனை
Jun 24, 2021, 10:34 am IST

பிரதமர் மோடியின் டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஶ்ரீநகரில் இருந்து புறப்பட்டார் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
Jun 24, 2021, 9:58 am IST

காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானும் ஒரு அங்கம் என பேசுவதா? மெகபூபா முப்தி கருத்துக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணி போராட்டம்
Jun 24, 2021, 9:24 am IST

டெல்லி பேச்சுவார்த்தை எதற்காக என்பதை மத்திய அரசு எங்களுக்கு தெரிவிக்கவில்லை: சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தரிகாமி
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+