டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு.. மாநில அந்தஸ்தை இழந்தது ஜம்மு- காஷ்மீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 370 Removed | நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370..காஷ்மீரில் இனி என்ன நடக்கும் தெரியுமா?-வீடியோ

    டெல்லி: இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படுவதால் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

    ஜம்மு- காஷ்மீரில் அண்மைகாலமாக சில விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருவதை அப்பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் உணர்ந்து வந்தனர். இந்த நிலையில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நேற்று நள்ளிரவு முதல் மெஹபூபா முஃப்தியும் ஒமர் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்

    இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    காஷ்மீரில் இத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அரசாணை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது.

    மாநில அந்தஸ்து

    மாநில அந்தஸ்து

    இதையடுத்து ஜம்மு- காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துவிட்டது.

    அமளி

    அமளி

    இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Jammu Kashmir becomes Union Territory, so it loses State status.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X