டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் நண்பர்களை தாக்கிவிட்டனர்.. விடிய விடிய போராடிய மாணவ அமைப்புகள்.. போலீஸ் தலைமையகம் முற்றுகை!

நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் டெல்லியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் டெல்லியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர்

    இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.. நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

     மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஜேஎன்யூ நிர்வாகத்துடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்று ஆலோசனை மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஜேஎன்யூ நிர்வாகத்துடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்று ஆலோசனை

    தலைவர்கள் கண்டனம்

    தலைவர்கள் கண்டனம்

    இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுக்க எப்படி

    நாடு முழுக்க எப்படி

    இதற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.முக்கியமாக நேற்று ஜெஎன்யூ மாணவர்களும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து டெல்லி சாலைகளில் பேரணி நடத்தினார்கள்.

    பேரணி திட்டம்

    பேரணி திட்டம்

    நேரடியாக பேரணி சென்று டெல்லி காவல்துறை தலைமையகத்தை முற்றுகை இட்டனர். மாணவர்களை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் போராட்டம் செய்தனர்.

    மும்பை என்ன

    மும்பை என்ன

    அதேபோல் மும்பையிலும், கொல்கத்தாவிலும் பல்வேறு இடங்களில் இதேபோல் போராட்டம் நடந்தது. கொல்கத்தா, மும்பையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் களமிறங்கி நேற்று இரவில் இருந்து போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டத்தை பல இடங்களில் மாணவிகள் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

    English summary
    Jawaharlal Nehru University Attack: Huge protest took place in Delhi supporting JNU students yesterday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X