டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பிறரை குஷிப்படுத்துவது மட்டுமே எனது வேலையா.. ஆசம் கான் விமர்சனத்துக்கு ஜெயப்பிரதா கண்ணீர்!

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் போட்டியிடும் ஜெயப்பிரதா கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வாக்கு சேகரித்து வருகிறார்.

தென்னிந்திய திரையுலகில் நடித்து வந்த நடிகை ஜெயப்பிரதா பின்னர் இந்தி திரையுலகிற்கு சென்றார். இதையடுத்து திரை வாய்ப்புகள் குறைந்ததும் அவர் அரசியலுக்கு வந்தார்.

தெலுங்கு தேசம் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அதிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகளில் சேர்ந்தார்.

தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும்.. கரூரில் ஜோதிமணி ஆரூடம்! தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும்.. கரூரில் ஜோதிமணி ஆரூடம்!

அசன் கான் போட்டி

அசன் கான் போட்டி

இந்த நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் ஜெயப்பிரதா. இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஆசம் கான் போட்டியிடுகிறார்.

இடுப்பை ஒடித்து

இடுப்பை ஒடித்து

ஏற்கெனவே ஆசம் கான், ஆபாசமான படங்களில் எனது படத்தை மார்பிங் செய்து வெளியிட்டார் என ஜெயப்பிரதா கடந்த 2009-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்நிலையில் ஆசம் கான் தனது பிரசாரத்தில் செல்லும் இடங்களிலெல்லாம் ஜெயப்பிரதா ஒரு நடனம் ஆடுபவர். இடுப்பை ஒடித்து ஆடுவதில் வல்லவர்.

பிரசாரத்தில் கண்ணீர்

பிரசாரத்தில் கண்ணீர்

மற்றவர்களை குஷிப்படுத்துவது மட்டுமே அவரது வேலை என்று கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார். இதனால் கோபமடைந்த ஜெயப்பிரதா இன்று தான் மேற்கொண்ட பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

தேம்பி அழுத ஜெயப்பிரதா

தேம்பி அழுத ஜெயப்பிரதா

அவர் கூறுகையில் ஆசம் கான் மோசமாக பேசுகிறார். என்னை பற்றி மார்பிங் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என் உயிருக்கும் ஆபத்து. என் மீது ஆசிட் வீச சதி செய்கின்றனர். அமர்சிங்குடன் என்னை இணைத்து பேசுகிறார்கள். ராக்கி கயிறு கட்டிய பிறகும் இப்படி பேசலாமா. அவர் எனக்கு காட்பாதர் என்று சொல்லி உடனே தேம்பி தேம்பி அழுதார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

English summary
Jayapradha cries on allegations made by Asam Khan during election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X