43 பேர் நூற்றுக்கு நூறு.. வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவு! மாணவர்களின் ஐஐடி, என்ஐடி கனவு நனவானதா?
டெல்லி: ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்த நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படும் இந்த தேர்வில் பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதி வருகின்றனர். ஜேஇஇ தேர்வை பொறுத்தவரை மெயின் எனப்படும் முதல்நிலை, அட்வான்ஸ்டு எனப்படும் முதன்மை தேர்வு என்று 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.
இந்த ஜேஇஇ தேர்வில் முதல்நிலை தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. முதன்மை தேர்வை ஏதாவது ஒரு நகரத்தில் உள்ள ஐஐடி கிளை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜேஇஇ 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
இதில் நாடு முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வுக்கான விடைகள் கடந்த 19 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சந்தேகங்கள், புகார்களை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக இறுதி விடை பட்டியலை ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது. ntaresults.nic.in, jeemain.nta.nic.in ஆகிய இணையதள முகவரியில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கும் முடிவுகளின் படி 43 மாணவர்கள் நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண்களையும் பெற்று உள்ளார்கள்.
இதில் 15 மாணவர்களின் விடைத்தாள்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறி அவர்களின் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைத்து உள்ளது. சிங்கராஜு வெங்கட் கவுண்டின்யா, கல்லக்குரி சாய்நாத் ஸ்ரீமந்த், இஷான் கண்டேல்வால் உள்ளிட்ட நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று இருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications