ஏர் ஆம்புலன்ஸ் விபத்து! ரூ.8 லட்சத்தை கடன் வாங்கி விமானத்தை ரெடி செய்த குடும்பம்! இப்படி ஆயிடுச்சே!
டெல்லி: ஜார்க்கண்டிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விமானத்தில் டெல்லிக்கு வந்த குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது. இந்த சோக சம்பவத்தில், பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக விமானத்தை ஏற்பாடு செய்ய ரூ.8 லட்சத்தை அந்த குடும்பம் கடனாக பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஜார்க்கண்டில் சந்வாப் பகுதியில் வசித்து வருபவர்தான் சஞ்சய். இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று எதிர்பாராத விதமாக இவரது ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சஞ்சய் படுகாயமடைந்தார்.

65% தீ காயங்களுடன் அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம் என்று மருத்துவமனைகள் கைவிரித்துவிட்டன. எனவே உடனடியாக அவரை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது. ஆனால் சாலை மார்க்கமாக சென்றால் பல மணிநேரம் ஆகும் என்பதால் ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக Redbird Airways Pvt Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் C90 (VT-AJV) ரக விமானம் பேசப்பட்டது.
விமானத்திற்கும், மருத்துவமனைக்கும் சேர்த்து ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, தங்களிடமிருந்த நிலம் மற்றும் வீட்டை அவரசமாக விற்று பணத்தை திரட்டியுள்ளனர். ஆனாலும் பணம் போதவில்லை. எனவே வெளியில் கடன் வாங்கி மொத்த பணத்தையும் ரெடி செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 7.11 மணிக்கு விமானம் கிளம்பியது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்தது. சுமார் 7.30 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. சரியாக சொல்வதெனில் வாரணாசிக்கு தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், கொல்கத்தா மற்றும் ரேடார் தொடர்பை இழந்தது.
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தேடுதலில் சிமரியாவில் உள்ள பரியாது பஞ்சாயத்து பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தில் சிகிச்சைக்காக சென்னை சஞ்சய், அவரது மனைவி அர்ச்சனா தேவி, உறவினர் துரு குமார், பைலட்களான கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, மருத்துவ உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications