ஜார்க்கண்ட் புரியாத புதிர்: தொங்கு சட்டசபை? மீண்டும் ஜேஎம்எம் - காங்கிரஸ் ஆட்சி? பாஜக வெல்லுமா?
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு, ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே தொடரும்; பாஜக கூட்டணி வெல்லும் என கலவையான முடிவுகளைத் தெரிவித்துள்ளதால் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதியும் 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றன. இரு கட்ட வாக்குகளும் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கும் ஆளும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தெளிவான முடிவுகளை வெளிப்படுத்தவில்லை.
Axis My India எக்ஸிட் போல் முடிவானது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிதான் மீண்டும் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என கணித்துள்ளது. ஆனால் C Voter எக்ஸிட் போல் முடிவானது பாஜக தனித்தே 34 இடங்களில் வெல்லும்; கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது.
இதுவரையிலான 3 கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 2 கருத்து கணிப்புகள் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவித்துள்ளன. சில கருத்து கணிப்புகளோ தொங்கு சட்டசபைதான் ஏற்படும்; குழப்பமான சூழ்நிலை உருவாகும் எனவும் கணித்துள்ளன. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications