இது நாஜி பாணி தாக்குதல்.. ரத்தத்தோடு விளையாட வேண்டாம்.. மத்திய அரசை எச்சரிக்கும் பினராயி விஜயன்!
டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் நாஜி பாணியில் கொடூரமாக சங் பரிவார் அமைப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் நாஜி பாணியில் கொடூரமாக சங் பரிவார் அமைப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக ஜேஎன்யூ பார்க்கப்படுகிறது.
இங்கு நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

கேரளா
இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் கேரளா முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள மாணவர் அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த மாணவர்கள் பலர் ஜேஎன்யூவில் படிக்கிறார்கள். அதனால் இந்த போராட்டம் அங்கு வலுத்துள்ளது.

பினராயி விஜயன்
முதல்வர் பினராயி இதுகுறித்து மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசுக்கு சகிப்புத்தன்மை குறைந்ததைதான் இந்த தாக்குதல் காட்டுகிறது. நாஜிக்களின் பாணியில் சங் பரிவார் அமைப்பு மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் இப்படித்தான் ஜெர்மனியில் செயல்பட்டார்கள்.

தாக்குதல்
அதேபோல் தற்போது இந்தியாவில் தாக்குதல் தொடங்கி உள்ளனர். ஜேஎன்யூவில் உள்ள மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என்று பலரை இவர்கள் தாக்கி இருக்கிறார்கள். இந்த நாட்டில் யாரையும் இவர்கள் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் .

ரத்தம் வேண்டாம்
ரத்தத்தோடு விளையாடும் போக்கை சங் பரிவார்கள் கைவிட வேண்டும். மாணவர்களின் குரலை அவர்கள் கேட்க வேண்டும். அந்த குரல் அவர்களுக்கு எதிராக ஒலிக்கிறது. அவர்கள் அதை கேட்க வேண்டும், என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications