சிறந்த ஆளுமைகளே நீங்க செஞ்சது... தீபிகா படுகோனே மீது ஜேஎன்யு பல்கலை துணைவேந்தர் கடும் அதிருப்தி
Recommended Video
டெல்லி: போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயலால் ஜேன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் சரமாரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள், நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சோனம் கபூர், மற்றும் அணுராக் காஷ்யப் பங்கேற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

நாளை (வெள்ளிக்கிழமை) தீபிகா படுகேனே நடித்த சாபாக் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் விளம்பரத்திற்காக வந்துள்ளதாக மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக அமைப்பினர் அவர் மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், நேற்றைய போராட்டத்திற்கு வந்த திரை உலகினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். "போராட்டக்காரர்களை ஆதரிக்க வந்த சிறந்த ஆளுமைகள் அனைவரையும் நான் கேட்க விரும்புகிறேன், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் செய்வதற்கான உரிமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களுடன் நீங்கள் ஏன் நிற்க முடியாது," என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
இப்படி துணை வேந்தர் கேள்வி எழுப்ப காரணம், ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோனே. , நம்முடைய உணர்வை வெளிப்படுத்த பயப்படவில்லை என்பதற்காக நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன், இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது என்றார். இதனாலேயே துணைவேந்தர் இக்கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications