டெல்லி டார்கெட்டில் ஜான் ஆரோக்கியசாமி.. தவெகவை வளைக்க பாஜக புதிய திட்டம்
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தவெகவை தங்கள் கூட்டணியில் இழுப்பதற்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியானது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் தவெக மீது பாஜக அடுத்த அஸ்திரத்தை ஏவ தயாராகிவிட்டதாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். [John Arockiasamy]

விஜய் பாஜக நெருக்கடி
தவெகவினரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். ஒருபக்கம் விஜய்க்கு பல்வேறு ஆஃபர்களை வழங்க முன்வந்தவர்கள், மறுபக்கம் தொடர் நெருக்கடியையும் கொடுக்கிறார்கள். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் நேற்று டெல்லியில் 3-வது முறையாக விசாரணை நடத்தியுள்ளனர். விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டது. இதில் கரூர் சம்பவத்தை விட தமிழ்நாடு தேர்தல் குறித்துதான் விஜய்யிடம் அதிகம் பேசப்பட்டதாம்.
நீங்கள் தேர்தலில் தனித்து நின்றால் திமுக தான் வெற்றி பெறும். அவர்களின் வெற்றிக்கு துணை நிற்கிறீர்களா. இல்லையேல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து திமுகவை வீழ்த்துவீர்களா என்று விஜய்யிடம் நேரடியாகவே கேட்டுள்ளனர். விஜய் பதில் எதுவும் சொல்லாமல் நழுவியுள்ளார். அவரின் நடவடிக்கைகளை வைத்து தவெக மசியவில்லை என்பதை டெல்லி உணர்ந்துவிட்டது.
சிக்கலில் ஜான் ஆரோக்கியசாமி
தற்போது தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இதனால் டெல்லி பாஜக வேறு ரூட்டை எடுத்துவிட்டதாம். கரூர் சம்பவம் தொடர்பாக அடுத்ததாக தவெக கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஜான் ஆரோக்கியசாமியை டெல்லி அழைத்து நெருக்கடி கொடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக மற்றும் விஜய்யுக்கு ஆரம்பத்தில் இருந்து அதிமுக பாஜக பக்கபலமாக உள்ளது. ஆனால் அவர்களை நெருங்கவிடாமல் செய்வது ஜான் ஆரோக்கியசாமி என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த தகவலால் ஜான் ஆரோக்கியசாமி அதிர்ச்சியாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications