மோடியை ஜோதிமணி, சுதா உள்ளிட்ட பெண் எம்பிக்கள் சதியாம்! சபாநாயகர் நேரடி குற்றச்சாட்டு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தாக்க முயன்றதாக, தமிழக காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் மீது ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். ஓம் பிர்லாவின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.

மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தது புயலை கிளப்பியிருந்தது. எப்படி இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் மோடி உரையாற்ற வேண்டும். எனவே அவரது பேச்சுக்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் உரையாற்றாமல் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பெண் எம்பிக்கள் மீது மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். பெண் எம்பி என்று மட்டும்தான் சபாநாயகர் கூறியிருக்கிறார். ஆனால், பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டதில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் இருந்திருக்கின்றனர். அப்படியெனில், இவர்கள் இருவரை குறி வைத்துதான் ஓம் பிர்லா பேசியிருக்கிறாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து கூறுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி ஜோதிமணி, செல்வி சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை.
அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications