பிரதமர் மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சி.. நான் மறுக்க மாட்டேன்! நாடாளுமன்றத்தில் ஜோதிமணி எம்பி பேச்சு!

பிரதமர் மோடியின் ஆட்சி இருண்ட காலம்- நாடாளுமன்றத்தில் ஜோதிமணி எம்பி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியை ஒட்டுமொத்தமாக இருண்ட காலம் என சொல்லிவிட முடியாது என யாருக்கெல்லாம் பொற்காலம் என்பதை கரூர் எம்பி ஜோதிமணி பட்டியலிட்டு பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் ஜோதிமணி எம்பி மக்களவையில் பேசுகையில் வாக்குறுதிகளை கொடுப்பதில் வல்லது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என பார்க்க வேண்டிய நேரம் இது. இனியும் வாட்ஸ் ஆப் பார்வார்டுகளை நம்பி நாம் வாக்களிக்க முடியாது.

அப்படி வாக்களித்ததன் பலனை இந்த நாடு இப்போது வருந்தி அனுபவித்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவோம். கருப்பு பணத்தையும் ஊழலையும் ஒழிப்போம். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்.

9 ஆண்டுகள்

9 ஆண்டுகள்

இதை சொல்லி 9 ஆண்டுகள் ஆகின்றன. நல்ல நாட்கள் வரும் என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அடுக்கினீர்கள். இதில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்றால் இன்னேரம் இந்த 9 ஆண்டுகளில் 18 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் நாட்டில் 45 ஆண்டுகாலங்களில் இல்லாத வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.

6750 வார்டுகள்

6750 வார்டுகள்

எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 6750 கிராம, நகர்ப்புற வார்டுகள் உள்ளன. இங்குள்ள வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களையும் இளம்பெண்களையும் நான் சந்தித்துள்ளேன். இவர்கள் பிஇ, எம்இ, நர்சிங், பிடெக், எம்டெக், எம்ஏ படித்துவிட்டு எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் உள்ளார்கள். என்ன வீட்டிலேயே இருக்கே வேலைக்கு போகவில்லையா என்ற கேள்விகளை தினசரி அனுபவிக்கிறார்கள்.

 முதுகெலும்பு

முதுகெலும்பு

முதுகெலும்பு தேய உழைத்து கடன் உடனை வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் போது அந்த பெற்றோரின் மனம் என்ன பாடுபடும்? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல அதானிக்கு அள்ளி கொடுக்கும் வங்கிகள், கல்வி கடனை கேட்டு வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்புகிறார்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா

 கல்விக் கடனை எப்படி அடைப்பார்

கல்விக் கடனை எப்படி அடைப்பார்

வேலை கிடைக்காத ஒருவர் கல்விக் கடனை அடைக்க காசுக்கு எங்கே போவார்? கல்விக் கடனை தள்ளுபடி செய்யுங்கள். ஊரில் பாதி பேர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்தால் அடுத்த தலைமுறையில் குறிப்பாக பெண்களை எப்படி படிக்க வைப்பார்கள் என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தியாவில் கரூர் 4ஆவது பெரிய ஏற்றுமதி நகரம்.

விவசாயம்

விவசாயம்

விவசாயம், ஜவுளி, பேருந்து கட்டுமானம், கொசு வலை உற்பத்தி, நிதி நிறுவனம் இவைதான் கரூரில் பிரதான தொழில். இவற்றில் ஒன்று கூட இன்று நன்றாக இல்லை என்பது வேதனையான செய்தி. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவில் உலகில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்தது. சிறு குறு தொழில்கள், சேவை தொழில்கள் உச்சம் தொட்டன. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

விவசாய துறை

விவசாய துறை

விவசாய துறையின் வளர்ச்சி 4சதவீதம். அதனால் வேலைவாய்ப்புகள் உருவானது. உலகில் 3ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை 5ஆவது இடத்திற்கு தள்ளிய பெருமை உங்களை சாரும். ஆனால் அந்த காங்கிரஸ் ஆட்சியை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நீங்கள் இருண்ட காலம் என்கிறீர்கள். உண்மையில் இருண்ட காலம் என்பது இந்த பாசிச பாஜக ஆட்சிதான் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

இருண்ட காலம்

இருண்ட காலம்

ஆனால் ஒட்டுமொத்தமாக உங்கள் ஆட்சியை இருண்டகாலம் என சொல்வதில் நியாயம் இருக்காது. இது சிலருக்கு பொற்காலம் என்பதை என்னால் மறுக்க முடியாது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், அலைக்கற்றைகள், ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய், தானியங்கி கிடங்குகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் , அழுத்தம் கொடுக்கப்பட்ட முதலீடுகள் என்று அனைத்தும் இந்த அரசின் கடைக்கண் பார்வையில் கிடைக்கப்பட்ட ஒருவர் அதானி குடும்பத்தின் தலைவர். அவருக்கு இது பொற்காலம்.

கார்பரேட் முதலாளிகள்

கார்பரேட் முதலாளிகள்

கார்பரேட் முதலாளிகளுக்கும் அன்பு மயமான இந்தியாவில் வெறுப்பை விதைப்பவர்களுக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்நாள் வங்கி சேமிப்புகளை கொள்ளையடித்துவிட்டு உங்கள் உதவியோடு ஓடி போன "மோடிகள்", மல்லையாக்களுக்கு இது பொற்கால ஆட்சி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் தூக்கி எறிவது புதிய கல்விக் கொள்கையாகத்தான் இருக்கும் என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+