"ஆபரேஷன் 160".. தமிழ்நாட்டில் மட்டும் 3.. டிக் அடித்த பாஜக.. அடடா எகிறி வரும் தாமரை.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2024 லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தேசிய அளவில் முக்கியமாக 160 இடங்களை பாஜக லிஸ்ட் எடுத்து உள்ளதாகவும் அக்கட்சி தேசிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி விவகாரங்களுக்கு இடையில்தான் பாஜக தேசிய தலைவர் நட்டா சமீபத்தில் கோயம்புத்தூர் வந்தார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை. மக்களுக்கு வேலை இல்லை. இங்கே உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் பாஜக தேவை.

அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். இதுதான் இப்போது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள், என்று கூறினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மாபெரும் வெற்றிபெறும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரப்போகிறது, என்றும் குறிப்பிட்டார். இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பாஜக டாப் நிர்வாகிகளிடம் நட்டா பேசி இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளும். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம், என்று கூறி இருக்கிறார்.

9 மாநிலங்கள்

9 மாநிலங்கள்

இந்த நிலையில் சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமான பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் 2024 லோக்சபா தேர்தலிலும் முழு மெஜாரிட்டி பெறுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கர்நாடகா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 9 மாநிலங்களில் எப்படியாவது வெல்ல வேண்டும். இங்கே ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வெற்றிபெற வேண்டும்.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

முக்கியமாக ஆட்சியில் இருக்கும் கர்நாடகா போன்ற மாநிலங்களை இழந்து விட கூடாது. இந்த தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்காக டீசராக பார்க்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் மக்கள் மத்தியில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். 45 நிமிடங்கள் இந்த மீட்டிங் நடந்து உள்ளது. இதில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி வாக்காளர்கள் பற்றியும் அவர்களை எப்படி பாஜக பக்கம் திருப்புவது என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு நாம் செய்த நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.

 160 தொகுதிகள்

160 தொகுதிகள்

2024 லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தேசிய அளவில் முக்கியமாக 160 இடங்களை பாஜக லிஸ்ட் எடுத்து உள்ளதாகவும் அக்கட்சி தேசிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் அந்த 160 இடங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதில் 160 இடங்களில் இருக்கும் 72 ஆயிரம் பூத்களை வலிமைப்படுத்த வேண்டும் என்று நட்டா கூட்டத்தில் உத்தரவிட்டு இருக்கிறாராம். இந்த 160 இடங்களில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி பணிகளை செய்ய வேண்டும். இங்குதான் பாஜக வீக்காக இருக்கிறது என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அதில் தமிழ்நாட்டில் இருந்து 3 இடங்களை குறிப்பிட்டு உள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவர் போட்டியிட வாய்ப்பு உள்ள இடம். தென் தமிழ்நாட்டில் ஒரு இடம். கொங்கில் ஒரு இடம் என்று மூன்று இடங்களில் இருக்கும் பூத்களை வலிமைப்படுத்த வேண்டும் என்று நட்டா உத்தரவிட்டதாக தெரிகிறது. நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் இந்த 160 இடங்களில் உறுதியாக வெல்வதை பற்றி யோசியுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில் பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள். ஒவ்வொரு பூத்திருக்கும் குறைந்தது 10 ஆட்களாவது இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பாஜகவிற்கு வர வேண்டும். இதற்கான பணிகளை தீவிரமாக செய்யுங்கள் என்று நட்டா உத்தரவிட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+