"செக்யூரிட்டி" இவரை வெளியே அனுப்புங்க.. வாக்குவாதம் செய்த மனுதாரர்.. சுப்ரீம் கோர்டில் என்ன நடந்தது?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்ய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் மனுதாரர் இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் செக்யூரிட்டியை அழைத்து அவரை உடனடியாக வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு ஒன்றின் போது நீதிமன்றத்தில் வாக்கு வாதம் செய்த வழக்கறிஞர் ஒருவரை, பதுகாவலரை விட்டு நீதிபதிகள் வெளியேற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

அருண் ராமச்சந்த ஹூப்ளிகர் என்பவர், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கும் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக தாக்கல் செய்யபட்ட மனு, நீதிபதிகள் பீலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தனது வாதத்தில், 'தன் வேலை குறித்த பிரச்சினை தொடர்பான உத்தரவில், முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் தலையிட்டதால் என் வாழ்க்கையே பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது' என்றார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நீதிபதியின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதே நேரத்தில் தனது மனுவை விசாரிக்க வேண்டும் என ஹூப்ளிகர் கூறினார். இதற்கு நீதிபதிகள் கூறும் போது, "உங்கள் மனுவில் எதுவுமே இல்லை. அபராதம் விதிக்க நேரிடும். நீதிபதியின் பெயரை சொல்ல வேண்டாம்" என்றனர்.
இதையடுத்து கடுமையான வாக்கு வாதம் ஹூபாளிகர், எதுவுமே இல்லை என எப்படி சொல்வீர்கள். எனக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. என் இறப்புக்கு முன்பாகவாவது எனக்கு நீதி கிடைக்க வேண்டும்" என ஆவேசமாக கூறினார். இதில் நாங்கள் தலையிட முடியாது. உங்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் ஹூப்ளிகர் விடாமல் தொடர்ந்து வாக்கு வாதம் செய்தார். இதனால், கோபம் அடைந்த நீதிபதிகள் உடனடியாக பாதுகாவலரை நீதிமன்ற அறைக்கு வருமாறு அழைத்து, மனுதாரரை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டனர். ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் ஹுப்ளிகர் கண்டிப்புக்கு உள்ளாகி இருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications