முதல் பெண் தலைமை நீதிபதி.. பில்கிஸ் பானு வழக்கில்.. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பி.வி.நாகரத்னா
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலை நாட்டி விடுதலை செய்யப்பட்ட 11 பேரை மீண்டும் கைது செய்ய வைத்த தைரியமான நீதிபதி பி. வி. நாகரத்னா. இவர் யார் என்பதை பார்ப்போம்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு கலவரம் ஏற்பட்டது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை ஒரு அசுர கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதையடுத்து அவருடைய குழந்தை உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த 11 பேரும் முன் கூட்டியே குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதன் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் 11 பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி 11 பேர் விடுதலையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் வரவேற்கிறார்கள். அதாவது குஜராத் அரசை எதிர்த்து தீர்ப்பு வழங்கிய தைரியமான பெண் நீதிபதி நாகரத்னா என புகழாரம் சூட்டுகிறார்கள்.
இந்த நிலையில் நாகரத்னா இந்த தீர்ப்பு மட்டுமில்லை பல அதிரடியான தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார். யார் அவர் ? உச்சநீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 9 நீதிபதிகளின் இடங்களை நிரப்ப நடந்த தேர்வில் 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் நீதிபதி பி.வி. நாகரத்னா. இவர் 2027 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
இந்த நிலையில் இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றில் நீதித் துறையில் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார். மேலும் இவரது தந்தை இ.எஸ். வெங்கட்ராமையா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான முதல் கன்னடர் என்ற பெருமையை பெற்றார். அதே வழியில் மகள் நாகரத்னாவும் விரைவில் ஒரு சாதனையை படைக்கவுள்ளார்.
நாகரத்னா கடந்த 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பிறந்தார். பெங்களூருவில் வழக்கறிஞராக இருந்த பி வி நாகரத்னா கடந்த 2008 ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வழக்கறிஞர்கள் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது நீதிபதிகள் நாகரத்னா, கோபால கிருஷ்ண கவுடா, தலைமை நீதிபதி பி.டி. தினகரன் ஆகியோரை ஒரு அறையில் வைத்து வழக்கறிஞர்கள் பூட்டி வைத்தனர். போராட்டம் முடிந்த பிறகு மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு துணிச்சலாக பேட்டி அளித்தார் நாகரத்னா. அவர் கூறியிருப்பதாவது: இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். கோழையாக இருந்துவிடமாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்றுள்ளேன். பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் இதை செய்ததால் நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என கூறியிருந்தார். அது போல் மின்னணு ஊடகங்களை ஒழுங்குப்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என தீர்ப்பளித்தார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் அவர் வெளியிட்ட தீர்ப்பில் கோவில் என்பது வர்த்தக நிறுவனம் அல்ல. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க முடியாது என நாகரத்னா தீர்ப்பளித்துள்ளார்.
அது போல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ரூ 1000, 500 ரூபாய் நோட்டுகள் மீதான தடை செல்லாது என 5 நீதிபதிகளில் ஒருவராக நாகரத்னா தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications