சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்! மே 14ல் பதவியேற்பு.. குடியரசு தலைவர் உத்தரவு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிக் காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமிக்கப்பட்டுள்ளார். தனக்குப் பிறகு நீதிபதி கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்திருந்த நிலையில், அதை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருக்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம், அதாவது மே 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. மரபுபடி ஓய்வு பெறும்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தனக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவரைத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்வார்.

நீதிபதி கவாய்
அதன்படி கடந்த ஏப்ரல் 16ம் தேதி நீதிபதி கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்திருந்தார். சட்டத்துறை அமைச்சகம் புதிய தலைமை நீதிபதி குறித்து பரிந்துரையை கோரியிருந்த நிலையில், சஞ்சீவ் கண்ணா தனது பரிந்துரை அளித்திருந்தார். இதற்கிடையே தலைமை நீதிபதியாக சஞ்சய் கண்ணாவின் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ராமகிருஷ்ண கவாயை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். நீதிபதி கவாய் மே 14ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இது தொடர்பாக மத்தியச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை மே 14 முதல் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
எவ்வளவு நாள்
மே 14ம் தேதி பதவியேற்கும் நீதிபதி கவாய் ஆறு மாதங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார். ஏனென்றால் அவர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர் ஆவார்.
புதிய தலைமை நீதிபதி கவாய்
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த கவாய் 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிறந்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் கேரள மற்றும் பீகார் மாநில ஆளுநரான ஆர்.எஸ். கவாயின் மகன்தான் பிஆர் கவாய். சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவாய், ஆகஸ்ட் 1992இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் உதவி அரசு வழக்கறிஞராகவும் 2000ல் நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
முக்கிய தீர்ப்புகள்
அதன் பிறகு 2003இல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியான பிறகு, பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை கவாய் வழங்கியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவித்தது எனப் பல தீர்ப்புகளைக் குறிப்பிடலாம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications