ஜம்மு காஷ்மீரின் காயம் ஆற வேண்டும் எனில் இதை செய்ய வேண்டும்! நீதிபதி கவுல் சொன்னதை கவனிச்சீங்களா!
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகளில் ஒருவரான கவுல், "ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல், "ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது, "1980களிலிருந்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம், போலீஸ் என அரசு அமைப்புகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என அரசுசாரா அமைப்புகளினால் நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறேன்.
நாம் முன்னோக்கி செல்ல காயங்கள் குணமடைய வேண்டும். அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதுதான் காயங்களைக் குணப்படுத்துவதற்கான முதல் படி. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவின் உண்மையான நோக்கம் என்பது, ஜம்மு காஷ்மீரை படிப்படியாக இந்தியாவுடன் இணைப்பதுதான். எனவே சட்டப்பிரிவு 367-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற திருத்தம் பரிந்துரைக்கப்படும்போது, அதைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "ராணுவம் என்பது அரசின் எதிரிகளை எதிர்த்து போரிடுவதற்குதான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல" என்று கூறியுள்ளார். தற்போதுவரை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வாசித்துள்ள தீர்ப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. முன்னதாக தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில், சிறப்பு சட்டப் பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டது செல்லும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications