மணிப்பூர் விவகாரம்: பிரதமர் பேசியது மட்டும் போதாது.. இந்த 2 ஆக்ஷன் கட்டாயம் வேணும்.. பொங்கிய ஒவைசி
டெல்லி: மணிப்பூர் இனப்படுகொலை நடப்பதாகவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐதராபாத் எம்.பி ஓவைசி ஆவேசமாக பேசியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். பழங்குடியின மக்கள் இந்த மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர். இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தால் கடந்த மே மாதம் 3ம் தேதி இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தான் நேற்று மணிப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் நேற்று வீடியோ வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்திற்கே அவமானம் என்றும் தனது இதயம் கனக்கிறதது எனவும் குற்றவாளிகள் தப்பமுடியாது என்றும் பிரதமர் மோடியும் வேதனையுடன் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து ஐதாரபாத் எம்.பி ஓவைசி கூறுகையில், " இந்த வீடியோ வேகமாக பரவியதால் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனப்படுகொலை அங்கு நடைபெற்று வருகிறது. முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்து விட்டு பிரதமர் மோடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நீதி நிலை நாட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications