பாகிஸ்தானில் திருமணம்! அந்நாட்டு உளவு அதிகாரிகளுடன் ரகசிய சாட்.. வசமாக சிக்கிய இந்திய யூடியூபர்
டெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் ரகசியமாக பேசிய விஷயங்கள் வெளியில் கசிந்துள்ளன.
தற்போது ஜோதி விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார். முன்னதாக ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் பேசியபோது, பாகிஸ்தானைப் புகழ்ந்தும், அங்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா 'டிராவல் வித் ஜோ' என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். வெளி ஊர்களுக்கு/மாநிலங்களுக்கு போவது, அந்த பயணத்தை அப்படியே வீடியோவாக எடுத்து தனது சேனலில் வெளியிட்டு வந்திருக்கிறார். வெளி ஊர்களுக்கு மட்டுமல்லாது, அண்டை நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார். இதில் பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகம் முறை சென்று வந்திருக்கிறார். இந்த பயணங்களின்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷன் அதிகாரி ஒருவரின் அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் பெயர் டேனிஷ்.
இவர் ஐஎஸ்ஐ உளவாளியான அலி ஹசனுக்கு ஜோவை அறிமுகப்படுத்தியுள்ளார். ஹசனுக்கும், ஜோவுக்கும் இடையில் ஆழமான உறவு இருந்திருக்கிறது. இது எந்த மாதிரியான உறவு என்பது தெரியவில்லை. ஆனால், பல முக்கியமான விவரங்களை ஹசனுடன் ஜோ பகிர்ந்திருக்கிறார். எந்த அளவுக்கு எனில், பாகிஸ்தானை புகழ்ந்தும், பாகிஸ்தானில் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான வாட்ஸ்அப் சாட்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பதிலுக்கு ஹசன் தரப்பில், "ஜோ நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், வாழ்க்கையில் ஒருபோதும் ஏமாற்றங்களைச் சந்திக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். உளவாளியிடம் எப்படி ஒருவர் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியும்? என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் பதில் நடவடிக்கையில் இறங்கியிருந்தது. அப்போது இந்தியாவின் எல்லை மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்கள் சில நிமிடங்களில் பாகிஸ்தானில் உள்ள உளவாளியான ஹசனுக்கு ஜோ தெரிவித்திருக்கிறார். ட்விஸ்ட் என்னவெனில், டேனிஷிடமும் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆனால் இந்த மார்ச் மாதத்தில் அவருடனான அனைத்து வாட்ஸ்அப் சாட்களையும் ஜோ டெலிட் செய்திருக்கிறார்.
இந்த விவகாரத்தையடுத்து ஜோ-வின் லேப்டாப், தொலைப்பேசி அழைப்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications