பிரம்மோஸை விட பவர்புல்.. இனி பாகிஸ்தான் வாலாட்டினால் வாலே இருக்காது.! K-6ஐ கையில் எடுக்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் உடனான மோதலில் பிரம்மோஸ் ஏவுகணை தான் இந்தியாவுக்கு கேம் சேஞ்சராக இருந்தது. பிரம்மோஸ் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. இதற்கிடையே பிரம்மோஸ் ஏவுகணையைக் காட்டிலும் பலம் வாய்ந்த K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் பணிகளில் இந்தியா இறங்கியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், அதற்குப் பதிலடி தருகிறோம் எனச் சொல்லிக் கொண்டு இந்தியா எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி முயன்றது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

K-6 Hypersonic Missile A Faster Stealthier Superweapon for the Indian Navy

பிரம்மோஸ் ஏவுகணை

இதனால் வேறு வழியில்லாமல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்கு வகித்தது. பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் முடங்கிவிட்டது. இதற்கிடையே இந்தியக் கடற்படை தனது பலத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

புதிய ஆயுதம்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் விதமாக இந்தியக் கடற்படை தனது பலத்தை ஆதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானம் தாங்கி கப்பல்கள், அதிநவீனப் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பெரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அடுத்தகட்டமாக பிரம்மோஸ் ஏவுகணையை விட பலம் வாய்ந்த K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை இந்தியா ஆரம்பித்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய இந்த K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ (DRDO) உருவாக்கி வருகிறது, இதன் சோதனைகள் விரைவில் நடைபெற உள்ளன.

K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை

K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM), இந்தியாவின் கடற்படையை வலிமையாக்க ஒரு முக்கியமான ஆயுதமாக இருக்கும். இது பிரம்மோஸ் ஏவுகணையை விட மேம்பட்ட திறன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற உலக நாடுகளிடம் இருக்கும் ஏவுகணைகளுக்கு இணையானதாக இது இருக்கும். இது வழக்கமான ஆயுதங்கள் மட்டுமின்றி அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதால் இது இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிப்பதாக இருக்கும்.

நொடியில் காலி

K-6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய முக்கிய விவரங்களைப் பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் சில விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.. கே6 ஏவுகணைக்கு அதன் வேகம் தான் பிரதான பலம்.அதை நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும்போது மணிக்கு 9,261 கிலோமீட்டர் வேகத்தில் (7.5 Mach) தாக்கும் திறன் கொண்டது.

இவ்வளவு வேகத்தில் தாக்குவதால் எதிரிகளுக்கு எதிர்வினையாற்றப் போதிய நேரம் இருக்காது. அதாவது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளை அனுப்பி வாலாட்டினால் இதன் மூலம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நொடியில் காலி செய்து, அந்நாட்டின் பொருளாதாரத்தை ஒரே தாக்குதலில் முடக்க முடியும்.

800 கிமீ வரை தாக்கலாம்

இந்த K-6 ஏவுகணையால் அதிகபட்சம் 8,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க முடியும் என்கிறார் அந்த மூத்த அதிகாரி. அதாவது ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எந்த இடத்திலும் இந்தியா நினைத்தால் தாக்க முடியும்.

இது முந்தைய வேரியண்டுகளான K-3 (1,000 முதல் 2,000 கிமீ தூரம்), K-4 (3,500 கிமீ தூரம்), K-5 (5,000 முதல் 6,000 கிமீ தூரம்) காட்டிலும் அதிகத் தூரம் சென்று தாக்க முடியும். ஏற்கனவே K-4 மற்றும் K-5 ஏற்கனவே கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. K-6 ஏவுகணையும் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டால் அது புதிய மைல்கல்லாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+