தமிழில் உறுதிமொழி! கமல்ஹாசன், சல்மா உட்பட.. 4 புதிய எம்பிக்கள் மாநிலங்களவையில் பதவியேற்றனர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வைகோ உள்ளிட்ட 6 தமிழக எம்பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களை எம்பிக்கள் புதியதாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 பேர் பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று அவர்களுக்கு மாநிலங்களவையில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாளான நேற்று அன்புமணி மட்டும் அவைக்கு செல்லவில்லை.

Kamal Haasan Rajya Sabha Parliament

வைகோ கடந்த 1978, 1984, 1990 என மூன்று முறை மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டும் நான்காவது முறையாக அவை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து நேற்றுடன் அவரது பதவி காலம் முடிவடைந்தது. வைகோ குறித்து மாநிலங்கள் அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண சிங் பேசுகையில், "இந்த அவைக்கு வைகோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். வைகோ உட்பட 6 எம்.பிகளும் மாநிலங்களவைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்" என்று பாராட்டு தெரிவித்து இருந்தார்.

தற்போது பதவி நிறைவடைந்த 6 எம்பிக்களில், திமுகவை சேர்ந்த பி. வில்சன் மட்டும் மீண்டும் மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அவரைத் தவிர மற்ற 5 பேரும் புதியவர்கள். இதில் திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம், அதிமுகவில் சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டு இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய 6 எம்பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகிய நான்கு எம்பிக்கள் மட்டும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். நால்வரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+