நாளை எம்பியாக பதவியேற்பு! கடமையை செய்ய டெல்லி செல்கிறேன்! கமல்ஹாசன் பூரிப்பு
டெல்லி: தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர்களுக்கு பதில் புதிய மாநிலங்களவை எம்பிக்கள் நாளை பதவியேற்கிறார்கள். இதற்காக கமல்ஹாசன் இன்று டெல்லி சென்றுள்ளார்.
மாநிலங்களவையில் நாளை பதவியேற்கவுள்ள கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "ஒரு இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும், கடமையுமாக இதை கருதுகிறேன். பெருமையோடு கடமையை செய்ய டெல்லி செல்கிறேன்.

நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துக்கள், மக்கள் வாழ்த்துக்களுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்கவுள்ளேன்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த வில்சன் (மீண்டும் தேர்வு), கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த வகையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் நாளை மாநிலங்களவையில் பதவியேற்கிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் நாளை எம்பியாக பதவியேற்கிறார். இதற்காக இவர் இன்றைய தினம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications