"370" நீக்கம் என்பது அரசியல்! வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது.. கபில் சிபல்
டெல்லி: மாநிலத்தின் எல்லைகளை மாற்றலாம். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் கபில் சிபல் வாதிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்க வழி வகை செய்யும் சட்டப்பிரிவு எண் 370 கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
மாநில அந்தஸ்தும் பறிபோய் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் நிலை ஏற்படும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த 5 பேர் கொண்ட அமர்வு முன்பு நடக்கும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணை நடக்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அனைத்து தரப்பினரும் ஜூலை 25 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது ஜம்மு காஷ்மீரின் தற்போது இருக்கும் நிலை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். இதில் உள்ள அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களை மட்டுமே விசாரிப்போம் என அமர்வு தெளிவுப்படுத்தியது. அந்த வகையில் இன்று முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது கபில் சிபல் வாதிடுகையில் அரசியலமைப்பு சட்டத்தை விளக்குவதற்காக வந்திருக்கிறோம். அதில் முரணானதை செயல்படுத்தி சட்டப்பூர்வமாக்க நாங்கள் இங்கு வரவில்லை. என்னை பொருத்தமட்டில் 370 சட்டப்பிரவிவு ரத்து என்பது அரசியல் செயலாகவே பார்க்கிறேன். அது அரசியலமைப்பு செயல்பாடு அல்ல. இத்தகைய அரசியல் செயல்பாட்டை நாடாளுமன்றத்தால் தீர்மானிக்க முடியாது. 370 சட்டப்பிரிவை திரும்ப பெறுவது என்பது அரசியல் முடிவு எடுப்பது நாடாளுமன்றத்தால் எடுக்க முடியாது.

ஜம்மு காஷ்மீர் மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியினர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 370 சட்டப்பிரிவில் தனித்துவமான விஷயம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதை பின்பற்றுவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. சட்டப்பிரிவு 3 சொல்வது என்னவென்றால் மத்திய அரசு எல்லைகளை மாற்றலாம். ஆனால் இந்த ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் எல்லையை மாற்றவில்லை. ஒரு மாநிலத்தை அப்படியே யூனியன் பிரதேசமாக்கியுள்ளார்கள்.
நாடாளுமன்றமானது மாநில எல்லைகளை மாற்றலாம், சிறிய மாநிலங்களை இணைத்து பெரிய மாநில எல்லையாக மாற்றலாம். ஆனால் இந்த நாட்டில் இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்றாக ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளா்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி காந்த், மாநிலத்தில் இருந்து யூனியன் பிரதேசத்தை உருவாக்க முடியும் என்றார். அதற்கு கபில் சிபல், ஆம் உருவாக்க முடியும். ஆனால் ஒரு நாள் மத்திய பிரதேசம் முழுவதும் யூனியன் பிரதேசமாக மாறுவதை ஏற்க முடியாது. இதை சிந்திக்கவும் முடியாது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கென சிறப்பு அந்தஸ்து இருந்தது.
நாடாளுமன்றம் ஜனநாயகத்திலிருந்து விலகிவிட்டது. பாஜகவின் நேரடி ஆட்சியில் யூனியன் பிரதேசமாக மாற்றி 5 ஆண்டுகளாகிவிட்டன. விரைவில் தேர்தல் வரும் என தினந்தோறும் சொல்வதை கேட்கிறோம். இதற்கெல்லாம் அரசியலமைப்பு என்ற ஒரு அடிப்படை இருக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் வந்தது. அதற்கு 3 மாதம் கழித்து 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. எனவே ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடிகிறது, சட்டசபை தேர்தலை நடத்த முடியவில்லையா என கேள்வி எழுப்பினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications