அமலாக்கத்துறை கேக்குறத பாருங்க.. இதான் பிரச்சனையே.. செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல் பரபர வாதம்!
டெல்லி: இன்று செந்தில் பாலாஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். "இதுதான் பிரச்சனையே" எனக் குறிப்பிட்டு அமலாக்கத்துறைக்கு எதிராக பரபரவென வாதாடி வருகிறார் கபில் சிபல்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு ஜூன் 21ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

ஹேபியஸ் கார்ப்பஸ் கேஸ்: இதற்கிடையே செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்தார்.
இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும் எனத் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று முன் தினம் விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
சுப்ரீம் கோர்ட்டில் பரபர: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதியம் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். நேற்றைய வாதத்தின் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்து வருகிறார் கபில் சிபல்.

கபில் சிபல் இன்றைய வாதங்கள்: காவல்துறை அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் வழக்கு உத்தரவு தெளிவு படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும்.
அப்படி எல்லா அதிகாரங்களும் இருந்தால் அது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. 15 நாட்களுக்கு மேல் சென்றால் அது நீதிமன்றக் காவலாக மட்டுமே இருக்க முடியும். போலீஸ் காவலாக இருக்க முடியாது. ஒருவர் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது விசாரிக்க எந்தத் தடையும் இல்லை.
செந்தில் பாலாஜி தற்போது சிறையில் தான் இருக்கிறார். வேண்டுமென்றால் இப்போது கூட அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தலாம். போலீஸ் காவலில் இருக்கும் கைதி ரிமாண்டிற்கு முன் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்.
இதுதான் பிரச்சனையே: காவல்துறையின் அதிகாரம் அமலாக்கத்துறையினருக்கு பொருந்துமா என்பதை தீபக் மகாஜன் வழக்கு தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. ஃபெரா வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலைப் பெறவில்லை. போலீஸ் அதிகாரிகள் தான் போலீஸ் ரிமாண்ட் கோர முடியும். இங்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகின்றனர். இதுதான் பிரச்சனை.
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல. எனவே, பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் 'அத்தகைய காவல்' என்பது நீதிமன்றக் காவலை மட்டுமே குறிக்கிறது. அமலாக்கத்துறை ரிமாண்டில் எடுப்பதை அல்ல. யாரும் அவர்களை விசாரணை செய்வதைத் தடுக்கவில்லை." என வாதிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications