கரூருக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் CBI துருவி துருவி 8 மணி நேரமாக விசாரணை
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.
மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநில இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர ஆய்வாளர் ஜி.மணிவண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (திங்கட்கிழமை) அவர் விசாரணைக்கு ஆஜராகினார்.
இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது பற்றியும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. 8 மணி நேரம் விசாரணை முடிந்து அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.
-
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்











Click it and Unblock the Notifications