Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரே பாரதம்.." காசி தமிழ் சங்கமம்.. தமிழர்களுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து வந்த லெட்டர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி கடிதம் எழுதி வருகின்றனர். இதற்கிடையே அவர்களுக்குப் பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் காசி உள்ளது. வரலாற்று ரீதியாகவும் காசிக்கு முக்கிய இடம் உள்ளது. காசிக்கும் தமிழகத்திற்கும் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு கடந்த நவ. மாதம் காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகச் சிறப்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்காகப் பலரும் பிரதமர் மோடியைப் பாராட்டி கடிதம் எழுதி வருகின்றனர்.

 பாராட்டு கடிதங்கள்

பாராட்டு கடிதங்கள்

தமிழ்நாட்டில் இருந்து இதுபோல பல நூறு கடிதங்கள் வந்துள்ளதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமர் மோடி ஒவ்வொரு கடிதத்திற்கும் பதிலளிக்க முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்படி பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது.. காசி தமிழ்ச் சங்கமம் அந்த வரலாற்று நினைவுகளை மீண்டும் எழுப்பி, நமது நாட்டின் பல்வேறு பகுதிகளும் எப்படி ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மேலும், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நமது நாட்டின் ஒற்றுமையை ஆழப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காசி-தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பைத் தமிழ்ச் சங்கமம் வெளிக்காட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

 ஒரே பாரதம்

ஒரே பாரதம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு மக்கள் வலுசேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். காசியில் சிறப்பான நேரத்தைச் செலவிட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் நாட்டின் துடிப்பான கலாச்சாரம் காசியில் கொண்டாடப்பட்டதாகத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

 காசி தமிழ்ச் சங்கமம்

காசி தமிழ்ச் சங்கமம்

பிரதமர் மோடிக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் மொழிகளிலும் கடிதம் சென்றதாகவும் அதற்குப் பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஐஐடி, மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் கல்வி அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+