சபரிமலை: 5,000 பக்தர்களை அனுமதிக்கும் ஹைகோர்ட் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனு
டெல்லி: சபரிமலையில் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் மண்டல பூஜை, மகர பூஜைகளுக்காக ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் என்றும் பின் 2,000 பக்தர்களும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 5,000 பக்தர்களை நாள்தோறும் அனுமதிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
தற்போதைய கொரோனா பரவல் சூழலில், 5,000 பக்தர்களை அனுமதிப்பது என்பது சுகாதாரத்துறை பணியாளர்கள், போலீசாருக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்தும். ஆகையால் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அம்மனுவில் கேரளா அரசு வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications