வார்னிங்.. அடுத்த 3 வாரங்களில் தொற்று அதிகரிக்குமாம்.. சுகாதாரத்துறை தந்த தகவல்.. தீவிர முன்னேற்பாடு
கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் தொற்று அதிகரிக்கும் என்கிறார்கள்
டெல்லி: அடுத்த 3 வாரங்களில் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரிக்குமாம்.. அதனை கட்டுப்படுத்த இப்போதே அனைத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளதாக கேரள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை... ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை எகிற கொண்டிருக்கிறது..
கடந்த 24 மணி நேரத்தில் 22,064 புதிதாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. அதாவது 1 லட்சத்து 63 ஆயிரத்து 98 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.

மலப்புரம்
கேரளாவில் அதிக அளவு பீதியை தந்து கொண்டிருபப்து மலப்புரம் மாவட்டம்தான்.. அங்கு நேற்று ஒரே நாளில் 3679 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. திருச்சூரில் 2752 பேருக்கும், கோழிக்கோட்டில் 2619 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கேரளாவில் எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், தொற்று கட்டுக்குள் வராமலேயே உள்ளது அம்மாநிலத்தை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது..

கேரளா
இப்படி தொற்று குறையாமல் இருக்க என்ன காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை கேரளாவுக்கு அனுப்பி வைத்தது.. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் எஸ்கே சிங் தலைமையிலான அந்த குழுவும் கேரளாவுக்கு சென்றது.. நேரடியாகவே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தியது.. பிறகு, அங்குள்ள நிலைமைகளை வைத்து, தொற்றை குறைக்க அவ்வப்போது ஆலோசனைகளையும் சொல்லி வருகிறது.

சிகிச்சைகள்
இந்நிலையில், கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:"கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது... போதுமான ஆக்சிஜனும் கையிருப்பில் உள்ளதால், அதில் தட்டுப்பாடு ஏதும் கிடையாது. கேரளாவில் கொரோனா டெஸ்ட் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.. கூடுதல் டெஸ்ட்கள் நடப்பதன் மூலம், தொற்று பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய் பரவல்
அடுத்த 3 வாரங்களில் கேரளாவில் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது... அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நிறைய முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது... முதல்கட்டமாக சனி, ஞாயிறு நாட்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது... மக்களும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications