காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லா கனடாவில் கைது! ஹர்தீப் சிங் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்
டெல்லி: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் தான் ஒப்புக்கொண்டு இருந்தார். இதற்கிடையே அங்கு காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்தாண்டு கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோசமான உறவு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா மீது கனடா சுமத்திய ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணமாகும்.

கனடா: கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே இந்தியா வலியுறுத்தி வந்தது. இருப்பினும், பல காலம் இதற்குக் கனடா அரசு தொடர்ந்து மவுனம் காட்டியே வந்தது. இந்தச் சூழலில் தான் ஒரு வழியாக தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது உண்மை தான் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டு இருந்தார்.
இதற்கிடையே காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லா கனடாவில் கைது செய்யப்பட்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்தாண்டு கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹர்தீப் சிங் கொலையில் தான் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா ஆதாரம் இல்லாமல் கூறியது குறிப்பிடத்தக்கது.
கைது: காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லாவை கனடா போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் இன்னும் சிறையில் தான் இருக்கிறாரா.. இல்லை விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், அவரது கைதை எந்தவொரு கனடா அதிகாரிகளும் உறுதி செய்யவில்லை.
இந்தியா கனடா இடையேயான அனைத்து தூதரக உறவுகளும் இப்போது மூடப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் எந்த தகவலும் பகிரப்படவில்லை எனத் தெரிகிறது.
என்ன காரணம்: கடந்த அக்டோபர் 27-28 தேதிகளில் கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நிலையில், அதன் பின்னரே டல்லா கைது செய்யப்பட்டார். அந்தத் தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.
-
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications