Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையிலேயே அங்க போறேன்.. திடீர் ராஜினாமாவுக்கு பிறகு குஷ்பு வெளியிட்ட பரபர ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஷ்பு தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு. இந்தப் பொறுப்பில் இருந்ததால் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார் குஷ்பு.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த குஷ்பு, 2010 காலகட்டத்தில் திமுகவில் செயல்பட்டார். பின்னர், 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். பின்னர், 2020ல் பாஜகவில் இணைந்த குஷ்பு, 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார்.

Khushbu national commission for women

பாஜகவில் குஷ்பு: இருப்பினும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அவ்வப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து கண்டனம் தெரிவித்து வந்த குஷ்பு, பல நேரங்களில் நேரில் சென்றும் விசாரணை நடத்தி வந்தார்.

அண்மையில் லோக்சபா தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அறிவித்திருந்தார். எலும்பு முறிவு பிரச்சனையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என அறிவித்திருந்தார் குஷ்பு.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குஷ்புவிடம் இருந்து பெறப்பட்ட ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் குஷ்பு பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. எனினும், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

குஷ்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி தனது ராஜினாமா கடித்ததை துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதன் மீதான நடவடிக்கையாக ஜூலை 30ஆம் தேதி அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி தாவுகிறாரா?: திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளதால், குஷ்பு கட்சி தாவப் போகிறாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ராஜினாமா குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

ராஜினாமா செய்தது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள குஷ்பு, "இனிமேல் தான் அரசியலில் ஆக்டிவ்வாக இருக்க முடியும். ஒன்றரை ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்ததால் அரசியல் ரீதியாகச் செயல்பட முடியவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் எதிவிலும் பங்கேற்க முடியவில்லை. கமலாலயத்திற்குக் கூட செல்ல முடியவில்லை.

கட்சிக்காக உழைப்பேன்: இனி முழுநேரமாக அரசியலில் செயல்படுவேன். இந்த பதவியை விட்டால் கட்சி பதவி கிடைக்கும் என கணக்குப் போட்டு செயல்படும் ஆள் நான் கிடையாது. கட்சிக்காக உழைப்பேன். இதுவரை கட்சி பொறுப்பு தொடர்பாக யாரிடமும் எதுவும் பேசவில்லை. எனக்கு என்ன வரவேண்டுமோ அது உரிய நேரத்தில் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

குஷ்பூ ட்வீட்: மேலும் குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். நமது உயர்ந்த கட்சியான பாஜகவில் முழுமையாக சேவை செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். இப்போது, ன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன்.

கமலாலயம் செல்கிறேன்: தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நான் சுதந்திரமாக முழுமனதுடன் சேவையாற்ற முடியும். இன்று காலை (ஆகஸ்ட் 15), சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலில் இருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது.

வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக உறங்குங்கள். என்னுடைய இந்த ரீ எண்ட்ரி நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக நடந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+