சாய்னா பற்றி ஆபாச கருத்து .. அமைச்சர் ட்விட்டரில் காட்டம்.. சிக்கலில் சிக்கி தவிக்கும் சித்தார்த்
டெல்லி: இந்தியாவுக்கு அளப்பரிய சாதனைகளை புரிந்த ஒரு ஆளுமையான சாய்னா நேவால் குறித்து மிகவும் தரம் தாழ்ந்த கருத்துகளை ஒருவர் தெரிவிப்பார் என்றால் அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பாலத்தில் காத்திருக்க வைத்த சம்பவம் அவரது பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு, காவல் துறை உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
பிரதமரின பாதுகாப்பு குறைபாடு குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் பிரதமருக்கே பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றால் இந்த தேசத்தில் ஒருவரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது என சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

ஆபாச ஒப்பீடு
இவர் ஜனவரி 5ஆம் தேதி போட்ட ட்வீட்டை நடிகர் சித்தார்த் ரீட்வீட் செய்து சாய்னாவுடன் மிகவும் ஆபாசமான அர்த்தம் கொடுக்கக் கூடிய வார்த்தையை ஒப்பிட்டு பேசியிருந்தார். இது பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய ஒரு ஆளுமையை சர்வ சாதாரணமாக ஆபாசமான கருத்தால் எதிர்கொள்வது எந்த மாதிரியான கோழைத்தனம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சித்தார்த் விவகாரம்
பிரதமரை பிடிக்காவிட்டால் அவருக்கு ஆதரவானவர்கள் மீது இத்தகைய மோசமான சொல்லடிகளால் வசைப்பாடுவது எந்த மாதிரியான மனநிலை என்றும் நெட்டிசன்கள் கேட்கிறார்கள். சித்தார்த் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளன. கருத்தை நல்ல கருத்தால் எதிர்கொள்ளாமல் இப்படி ஆபாசமாக பேசி பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது சரியா என கண்டனங்கள் பெருகுகின்றன.

சித்தார்த்திற்கு குவியும் கண்டனங்கள்
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சித்தார்த்தின் பெயரை குறிப்பிடாமல் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் சாய்னா நேவால் விளையாட்டுத் துறையில் செய்த அளப்பரிய சாதனைகளால் இந்தியாவே பெருமை கொள்கிறது. அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதை காட்டிலும் சிறந்த தேசபக்தர்.
Recommended Video

மோசமான கருத்து
இத்தகைய சிறந்த ஆளுமை மீது அது மாதிரியான மோசமான கருத்துகளை ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அது அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என்றார். இந்த நிலையில் சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications