எங்கள் சகோதரிக்காக.. கொல்கத்தா பெண் மருத்துவருக்காக களமிறங்கும் மாணவர்கள்! டெல்லியில் மெகா சம்பவம்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மீண்டும் போராட்டம் துளிர்க்க இருக்கிறது. தற்போது கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த மாதம் முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

kolkata doctor case west bengal kolkata

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிரம் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கன்னம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.

இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினர். மூன்று வாரங்களை கடந்து போராட்டம் தொடர்ந்த, நிலையில் அரசு மருத்துவமனைகளை மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் மேற்குவங்கத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.

மேலும் மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டதை அடுத்து மருத்துவ பயிற்சி மாணவர்கள் பணிக்கு திரும்பினார். அதே நேரத்தில் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதை அடுத்து மருத்துவ மாணவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு நாளை மறுநாள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். கொல்கத்தா மாணவி விவகாரத்தில் நீதி கோரி துணிச்சலாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி ஜேஎல்என் ஆடிட்டோரியத்தில் இருந்து நாளை மறுநாள் மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணி தொடங்கும். மருத்துவ மாணவிக்கு நீதி வழங்கப்படாத நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்" என டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+